Vijay: லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சூழ்ந்த ரசிகர்கள்... தளபதியோட க்யூட் ரியாக்ஷனை பாருங்க
தலகோனா: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தலகோனா பகுதியில் நடைபெற்று வருகிறது.
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அவரது ரசிகர்கள் சூழ்ந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
விஜய்யை சூழ்ந்த ரசிகர்கள்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காஷ்மீர், சென்னையை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் தலகோனா பகுதிகளில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் தலகோனா சென்றுள்ளனர்.

கடந்த சில தினங்களாக தலகோனாவில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக செட்டிங் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய்யை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தனர்.
இதனையறிந்த விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே வந்து தனது ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும், ரசிகர்களை பார்த்து க்யூட்டாக ரியாக்ட் செய்த விஜய்யை பார்த்து அவரது ரசிகர்களும் உற்சாகமாக குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் லால் சலாம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போது அதேபோல் விஜய்யையும் அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று பார்த்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கொடுத்து லைம் லைட்டில் வந்தார் விஜய். அப்போது அரசியல் குறித்தும் விஜய் பேசியதால் தற்போது அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் விடாமல் துரத்தி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விஜய்யை 'தலைவா' எனவும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், தலகோனாவில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பு அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. மேலும், இதுவே லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











