Vijay: ‘சண்டையெல்லாம் கிடையாது..’ அப்பாவை சந்தித்த விஜய்... நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தின் முதற்கட்ட பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய், நேற்று சென்னை திரும்பினார்.

வீடு வந்ததும் விஜய் செய்த செயல், அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே சண்டை என செய்திகள் வெளியான நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தளபதி.

 Vijay: Thalapathy Vijay met his father S.A Chandrasekhar

அப்பாவை சந்தித்த விஜய்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். ஆரம்பத்தில் தனது அப்பா, அம்மா இயக்கி, தயாரித்த படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த விஜய், பல தோல்விகளை கடந்து முன்னணிக்கு வந்தார். இதற்கெல்லாம் பெரிய பின்புலமாக இருந்தது விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான். அவர் மட்டும் இல்லாமல், விஜய்யின் அம்மா ஷோபாவும் அவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றார்.

அப்படியாக கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வளர்ந்த விஜய், தற்போது நம்பர் 1 இடத்திற்கு வந்துவிட்டார். விஜய்யின் படங்களுக்கு தான் நல்ல ஓபனிங் கிடைப்படதாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறைவைப்பதே இல்லையென்றும் தியேட்டர் உரிமையாளர்களால் சொல்லப்படுகிறது. இதனிடையே கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையென செய்திகள் வெளியாகின.

விஜய் படங்களின் கதைகளை தேர்வு செய்வது, அரசியல் என்ட்ரி என பலவற்றிலும் எஸ்.ஏ சந்திரசேகர் தலையிடுவதாக சொல்லப்பட்டது. அதனால், தனது தந்தையென்றும் பார்க்காமல், விஜய் அவரிடம் பேசாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உட்பட விஜய்யின் வீட்டில் நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அம்மா ஷோபனாவை மட்டும் சந்தித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது லியோவில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்துக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் ஆகியவை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார் விஜய். வீடு வந்ததும் முதல் வேலையாக விஜய் பார்த்த செயல், இப்போது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் உடல் நலகுறைவு காரணமாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது விஜய்க்கு தெரிந்திருந்தும் இன்னும் அப்பாவை பார்க்கவில்லையே என செய்திகள் வெளியாகின. ஆனால், தங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக, தனது அப்பாவை நேரில் சந்தித்துள்ளார் விஜய். அப்போது அப்பா, அம்மா இருவருடனும் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் விஜய் தனது அப்பா, அம்மாவை சந்தித்துள்ளது, ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பலரும் விஜய் தனது மகன் சஞ்சய்யை சந்தித்தாரா என கேட்டு வருகின்றனர். இயக்குநராக அறிமுகமாகவுள்ள சஞ்சய்க்கு, விஜய் இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. விரைவில் அதற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் விஜய் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X