Vijay: அமெரிக்காவில் அடுத்த சம்பவம்... அட்லீக்காக விஜய் எடுத்த முடிவு... ஃபேன்பாய் மொமண்ட் லோடிங்!

ஏஞ்சல்ஸ்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே விஜய் தனது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய், அடிக்கடி ஃபேன் பாயாக மாறி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

Equalizer 3 FDFS பார்த்த விஜய், அடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்தையும் அமெரிக்காவில் பார்த்துவிட்டு சென்ன திரும்ப முடிவு செய்துள்ளாராம்.

 Vijay: Thalapathy Vijay plans to watch Jawan in the USA

விஜய்யின் அடுத்த அதிரடி: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய், லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68ல் பிஸியாகிவிட்டார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு இப்போதே தாறுமாறாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் இரண்டு கேரக்டர்கள் மட்டுமின்றி, அவரது லுக், ஸ்டைல், மேனரிசம் என அனைத்தும் செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்குமாம். அதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு விஜய்யை கூட்டிச் சென்றுள்ளார் வெங்கட் பிரபு. இவர்களுடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California - Institute for Creative Technologies-இல் விஜய்க்கு மேக்கப், பாடி ஸ்கேனிங் செய்யப்பட்டுள்ளதாம்.

அதன்பின்னரே தளபதி 68 படத்திற்காக அவரது கெட்டப் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே அமெரிக்காவில் உள்ள விஜய், திடீரென ஃபேன் பாயாக மாறி அவரது ரசிகர்களுக்கே டஃப் கொடுத்திருந்தார். ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்த விஜய், ரியல் ஃபேன் பாய் மோடுக்கு மாறி தியேட்டரையே அதிர வைத்துள்ளார். இந்த போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டானது. இதனைத் தொடர்ந்து இன்னொரு சம்பவமும் விரைவில் அரங்கேறவுள்ளதாம்.

அதாவது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யை வைத்து தொடர்ச்சியாக 3 படங்களை இயக்கியுள்ள அட்லீ, அவரது செல்ல தம்பியாகவும் வலம் வருகிறார். ஜவான் உருவாக விஜய்ண்ணா தான் காரணம் என அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேசியிருந்தார். இதனால் அட்லீக்காக ஜவான் FDFS பார்க்க பிளான் செய்துள்ளாராம் விஜய்.

சென்னை வந்தால் ரசிகர்களுடன் ஜவான் பார்ப்பது முடியாத காரியம் என்பதால், அமெரிக்காவிலேயே இந்தப் படத்தை பார்த்துவிட பிளான் செய்துவிட்டாராம். அதன்படி, செப்டம்பர் 7ம் தேதி ஜவான் FDFS பார்க்க விஜய்யும் தளபதி 68 டீமும் ரெடியாகிவிட்டதாம். அதன்பின்னரே அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்ப முடிவு செய்துள்ளாராம். இதனால், அமெரிக்காவில் விஜய்யின் அடுத்த ஃபேன் பாய் சம்பவம் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்களும் ரெடியாகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X