Vijay: வாவ்!! ஒரிஜினல் சுப்ரமணியுடன் விஜய்... லியோ ஹைனாலாம் சும்மா தான்... ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

அதேநேரம் லியோவில் ஹெய்னா கிராபிக்ஸ் காட்சியும், க்ளைமேக்ஸில் வரும் சுப்ரமணி கேரக்டரின் ட்விஸ்ட்டும் சூப்பராக ரீச் ஆனது. இந்நிலையில், விஜய் தனது வீட்டில் வளர்க்கும் ஒரிஜினல் சுப்ரமணியுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Vijay: Thalapathy Vijay playing with his pet video is trending

விஜய்யின் ஒரிஜினல் சுப்ரமணி
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்தப் படம் ரிலீஸாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என சொல்லப்படுகிறது. லியோ ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி லியோ வரும் 23 அல்லது 24ம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படியொரு பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் காம்போ, லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கலவையான விமர்சனங்களைப் பெற்ற லியோ, சில நெகட்டிவான ட்ரோல்களையும் சந்தித்தது. அதேநேரம் லியோ படத்தின் ஆரம்பத்தில் விஜய் ஹைனாவை பிடிக்கும் காட்சியில் கிராபிக்ஸ் வேலைகள் செம்ம மிரட்டலாக இருந்தன. காட்டில் இருந்து ஊருக்குள் வந்த ஹைனானாவை, விஜய் விரட்டிப் பிடிப்பார். அதுமட்டும் இல்லாமல், அதற்கு சுப்ரமணி என பெயர் வைத்து தன்னுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்.

அதற்கான காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு, க்ளைமேக்ஸில் அதே சுப்ரமணியை (ஹைனா) வைத்து சம்பவம் செய்திருப்பார். த்ரிஷாவையும் அவரது குழந்தையையும் வில்லனின் ஆட்கள் கொலை செய்யும் வரும்போது, விஜய் சுப்ரமணி என்ற ஹைனாவை அழைப்பதும், அது தாறுமாறாக என்ட்ரி கொடுப்பதும் தரமாக இருந்தது.

அதேபோல், விஜய் தனது வீட்டில் ஒரு சுப்ரமணியை வளர்த்து வருகிறார். செல்லமாக வளர்க்கும் அந்த நாய்க்கு விஜய் சாப்பாடு வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை லியோவில் விஜய் 'சுப்ரமணி’ என கூப்பிடும் வாய்ஸ் ஓவர், பிஜிஎம் ஆகியவையுடன் எடிட் செய்துள்ளனர் ரசிகர்கள். மேலும், விஜய்யின் ஒரிஜினல் சுப்ரமணி என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X