Vijay: Equalizer 3 FDFS பார்த்த விஜய்... இவருதான் ரியல் ஃபேன்பாய்... தியேட்டர்ல அலப்பறைய பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய்.
இந்தப் படத்தின் மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக லாஸ் சென்றுள்ள விஜய், அங்கு Equalizer 3 படத்தின் FDFS பார்த்துள்ளார்.
அப்போது அவர் ஃபேன் பாயாக மாறி தியேட்டரில் அலப்பறை செய்த போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபேன் பாய் மோடுக்கு மாறிய விஜய்: விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான வாரிசு, பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படம் வெளியான உடனேயே லோகேஷ் கனகராஜ்ஜின் லியோ பட ஷூட்டிங்கில் இணைந்தார் விஜய். லியோ படப்பிடிப்பும் 125 நாட்களில் முடிந்து, இப்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
இந்நிலையில் லியோ ரிலீஸாகும் முன்பே தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். லியோ படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே, தளபதி 68 அப்டேட் அபிஸியலாக வெளியானது. அதன்படி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், தளபதி 68 பூஜை செப்டம்பரில் நடைபெறும் எனவும், அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 படத்தின் முதற்கட்ட வேலைகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கிவிட்டன. அதன்படி, விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California - Institute for Creative Technologies-க்கு சென்றுள்ளனர்.

மேக்கப், பாடி ஸ்கேனிங் போன்ற ஹை-டெக் ரிசர்ச்களுக்கு பிரபலமான இந்த இன்ஸ்டிடியூட்டில், விஜய்க்கும் ஸ்கேனிங் செய்யப்பட்டு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த போட்டோஸ் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது விஜய் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ளார். பொதுஇடங்களிலும் படப்பிடிப்பிலும் ரொம்பவே அமைதியாக இருக்கும் விஜய், நண்பர்களுடன் மட்டுமே ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகிறது.
அதேநேரம் விஜய் படத்தின் FDFS பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருப்பது தான் வழக்கம். ஆனால், அமெரிக்கா சென்றுள்ள தளபதி, ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்து ரசித்துள்ளார். அதுவும் ரியல் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ள அவர், படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எழுந்துநின்று அப்ளாஸ் செய்துள்ளார். இதனை போட்டோ எடுத்துள்ள வெங்கட்பிரபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். விஜய்யின் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











