Vijay: பிரேக் எடுக்க வாய்ப்பே இல்லை... அடுத்தடுத்து அப்டேட் கொடுக்க ரெடியான தளபதி விஜய்!

சென்னை: கோலிவுட்டின் வசூல் மாஸ்டரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

தளபதி 68க்குப் பின்னர் சினிமாவில் இருந்து மூன்று ஆண்டுகள் விலகலாம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இது வதந்தி என விஜய் தரப்பில் இருந்து ஏற்கனவே மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு மாஸ் எடுத்துள்ளாராம் தளபதி.

 Vijay: Thalapathy Vijays next three films update will be out soon

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்:விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் விஜய் தனது போர்ஷனை முடித்துவிடுவார் எனவும் சொல்லப்படுகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாவதால் உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க லோகேஷ் ரெடியாகிவிட்டார்.

லியோ வெளியானதும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்ஸ் லியோ ரிலீஸான பின்னர் தான் வெளியாகுமாம். இதனிடையே 10, 12ம் வகுப்பு மாணவர்களை திரட்டி அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார் விஜய். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் அரசியல் குறித்தும் பஞ்ச் வைத்து பேசியிருந்தார்.

இதனால் தளபதி 68 ஷூட்டிங் முடிந்ததும் விஜய் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதற்காக சினிமாவில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் விலகுவார் எனவும் செய்திகள் வந்தன. ஆனால், விஜய் சினிமாவில் இருந்து விலகவில்லை எனவும், தளபதி 68 படத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும் இதனை விஜய் ரசிகர்களே நம்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் இந்த பஞ்சாயத்துக்கு முடிவுகட்டும் வேலையில் இறங்கிவிட்டாராம் விஜய். லியோ ரிலீஸாகும் முன்னரே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டார் விஜய். அதே பாணியில் தளபதி 69, தளபதி 70 என அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிடவும் விஜய் முடிவு செய்துள்ளாராம். அதேபோல், அந்த படங்களின் ஷூட்டிங்கும் அடுத்தடுத்து நடக்கும் வகையில் கால்ஷீட்டை ரெடி செய்துவிட்டாராம்.

அதன்படி, விஜய்யின் தளபதி 69 படத்தை அட்லீ இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். தளபதி 70 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் தளபதி 70 படத்தின் இயக்குநரை மட்டும் விஜய் இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதேநேரம் விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 69, 70 படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் போது, அரசியல் வதந்திகள் முடிவுக்கு வரும் என விஜய் நினைத்துள்ளாராம். ஆனாலும் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X