GOAT: சென்னையில் கோட் படத்தோட டிக்கெட் விலை இவ்ளோ ஜாஸ்தியா?.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் (Vijay) நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் (GOAT)அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் பணிகள் மிகவும் மும்முரமாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் நடைபெற்று வருகின்றது. வார இறுதி நாளான நாளை முதலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் தேதியில் இருந்தோ படத்திற்கான முன் பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கான (GOATFDFS)முன் பதிவு இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை போட்டி போட்டுக் கொண்டு நேரில் சென்று வாங்கியும், இணையத்தில் புக் செய்துகொண்டும் உள்ளனர்.

கோட் படத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தி கோட் படம் குறித்து அஜித் கேள்விப்பட்ட பின்னர், வெங்கட் பிரபுவிடம், தனது 50வது படமான மங்காத்தா படத்தை விடவும் 100 மடங்கு சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கவேண்டும் எனவும் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபுவே சமீபத்தியபேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பதால் இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

vijay goat

குறிப்பாக படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், அஜித் தி கோட் படத்தின் ட்ரைலரைப் பார்த்தாரா? பார்த்த பின்னர் என்ன கூறினார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "அஜித் சார் ட்ரைலர் பார்த்துட்டாரு. ட்ரைலர் பார்த்த பின்னர் எனக்கு மெசேஜ் பண்ணாரு. அதில், ட்ரைலர் நல்லா இருக்குடா, விஜய்க்கும் டீம்க்கு வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லீடு" என குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே அஜித் ரசிகர்களும் கோட் ட்ரைலரை கொண்டாடி வந்த நிலையில், கோட் ட்ரைலர் குறித்து அஜித்தின் கமெண்ட் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இசை வெளியீட்டு விழா: படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும், படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு உள்ளார். மேலும் படத்தின் இடைவேளை காட்சி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும் அளவிற்கு இருக்கும் எனவும், இதுவரை தமிழ் சினிமாவில் இது போன்ற படம் ரிலீஸ் ஆனதே கிடையாது.

vijay goat

வெங்கட் பிரபு: படம் மூன்று மணி நேரம் ஓடுகின்றது என்றால் ரசிகர்கள் பலருக்கும் படம் இழுவையாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். ஆனால் நீங்கள் ஒரு நிமிடம் கூட மொபைலை கையில் எடுக்காத அளவிற்கு படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம் எனக் கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

vijay goat

டிக்கெட் விலை: படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்கமான ரோகிணி திரையரங்கில் தி கோட் படத்திற்கான முதல் நாள் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தின் டிக்கெட் விலை ரூபாய் 390க்கு ரோகினி திரையரங்க நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்துள்ளது. இது ரசிகர்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தாலும், முதல் நாள் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும் டிக்கெட்டினை போட்டி போட்டு வாங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X