தி கோட் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி.. விஜய் ரசிகர்களுக்கு ஸ்வீட்டான அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகின்றார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாளை அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி மூன்றாவது பாடல் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது படத்தின் போஸ்டர் வெளியானபோதே தெரிந்தது. படத்தில் விஜய் முன்று பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களிலும் விஜய் பாடியுள்ளார். முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இரண்டாவது பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடல் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

இந்நிலையில் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது தோழி ஐஸ்வர்யா தயாரித்துள்ள படமான நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தினைப் பார்க்க வந்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் அப்டேட் எதாவது கொடுங்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு வெங்கட் பிரபு மூன்றாவது பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது எனத் தெரிவித்தார்.

ட்ரைலர் ரிலீஸ்: மேலும் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. அதற்கு, படம் ரிலீஸ் ஆவதற்கு 10 முதல் 15 நாட்களுக்குள் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார். இப்போதெல்லாம் யாருமே படத்தின் ட்ரைலரை மிகவும் முன்னதாக ரிலீஸ் செய்வது இல்லை. எனவே படத்தின் ட்ரைலர் அதிக பட்சம் படம் ரிலீஸ் ஆவதற்கு 10 நாட்கள் முன்னதாக ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார்.
படம் ரிலீஸ் எப்போ?: மேலும் செய்தியாளர் தரப்பில் இருந்து, படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பணிகள் எப்படி போய்க்கொண்டு உள்ளது என கேட்கப்பட்டது. அதற்கு வெங்கட் பிரபுவின் பதில் படம் செப்டம்பர் மாதம் வெளியாவதை உறுதி செய்யும் விதமாக அமைந்ததால், படத்தின் ட்ரைலர் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலோ அல்லது ஆகஸ்ட் மாதத்தின் இறுதியிலோ வெளியாகலாம் என்ற பேச்சுகள் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபுவின் இந்த செய்தியாளர் சந்திப்பு விஜய் ரசிகர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்ததைப் போல் உற்சாகத்தில் உள்ளனர்.

வெங்கட் பிரபு தோழி: இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகியுள்ள தமிழ் படங்களில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படமும் ஒன்று. இந்த படத்தினை மீசையை முறுக்கு படத்தில் நடித்த நடிகர் அனந்த் இயக்கி நடித்துள்ளார். படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தோழி ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து கூறியதை தெரிவித்துள்ளார்.

செம சிங்க்: அவர், " எனது பிறந்த நாளின்போது தி கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று விஜய் சாரைப் பார்த்தேன். அப்போது அவரிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் சாரிடம் வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது எப்படி சார் இருக்கின்றது எனக் கேட்டேன். அதற்கு அவர், " செம சிங்க்.. செம சிங்க்.. நான் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆனால் ஒருவருடன் அவ்வளவு எளிதாக சிங்க் ஆகிவிடமாட்டேன். ஆனால் வெங்கட் பிரபுவுடன் சீக்கிரமே சிங்க் ஆகிவிட்டேன். என்னமோ செய்யறான்னு மட்டும் தெரியுது. ஆனால் எப்படினு தெரியல. ஆனால் எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய படமா இருக்கும்னு தோணுது. இரு ஃபேமிலி ஆக்ஷன் எண்டர்டைனர் படமா இருக்கும்" எனக் கூறியதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











