100 மங்காத்தான்னு அஜித் சும்மாவா சொன்னார்.. கோட் படத்தில் இடம்பெற்ற அந்த சீன்.. அதை நோட் பண்ணீங்களா?
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
திகோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடிப்பினைப் பார்த்து மிரண்டுபோயுள்ளனர். டீ- ஏஜிங் செய்யப்பட்ட விஜய் குறித்து ஸ்பார்க் பாடலில் விமர்சனம் செய்தவர்கள் ட்ரைலரில் வருவதைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். ட்ரைலரின் இறுதியில், விஜய் நடித்து வெளியான கில்லி படத்தில் விஜய் பாடும் மருதமலை மாமணியே முருகய்யா பாடலைப் பாடுவதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோட் படத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றபடி டீ ஏஜிங் செய்யப்பட்டுள்ளது ட்ரைலர் மூலம் தெரியவருகின்றது.

அஜித் சொன்னது: தி கோட் படம் குறித்து அஜித் கேள்விப்பட்ட பின்னர், வெங்கட் பிரபுவிடம், தனது 50வது படமான மங்காத்தா படத்தை விடவும் 100 மடங்கு சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கவேண்டும் எனவும் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபுவே சமீபத்தியபேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், அஜித்தின் 50வது படத்தை நான் இயக்கினேன், அதேபோல் விஜய்யின் 50வது பிறந்த நாளுக்குப் பின்னர் வெளியாகும் தி கோட் படத்தையும் நான் தான் இயக்கியுள்ளேன், எனவே தல 50 ம் நான் தான், தளபதி 50 ம் நான் தான் எனக் கூறியிருந்தார்.

மங்காத்தா, ஆரம்பம்: கோட் ட்ரைலரில் அஜித் படத்தில் இருந்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மங்காத்தா படத்தில் இடம் பெற்றுள்ள அஜித் பேசும் வசனமான, சத்தியமா இனிமேல் குடிக்கவே மாட்டேன் எனும் டையலாக்கை அஜித் ரசிகர்களுமே கொண்டாடி வருகின்றனர். அதேபோல் ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் அஜித் லிஃப்ட்டுக்குள் இருந்து வெளியே வருவார். அந்த காட்சிக்கு திரையரங்கமே அதிரும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா பி.ஜி.எம் போட்டு இருப்பார். அதேபோல் ஒரு காட்சி தி கோட் படத்தின் ட்ரைலரிலும் இடம் பெற்றுள்ளது.

கொண்டாடும் அஜித் ரசிகர்கள்: அஜித் கூறியதை மனதில் வைத்துதான் வெங்கட் பிரபு இதுபோன்ற காட்சிகளை படத்தில் வைத்தது மட்டும் இல்லாமல், அதனை ட்ரைலரிலும் வைத்து அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது கோட் படக்குழு. இந்த காட்சிகளை தனியாக வெட்டி எடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் விஜய் ரசிகர்கள் எந்த அளவிற்கு கோட் படத்தின் ட்ரைலரைக் கொண்டாடுகின்றார்களோ அதே அளவிற்கு அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











