Vijay: நண்பரை களத்தில் இறக்கிய விஜய்...யாரும் எதிர்பாரா பெயர்!
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளார். இதையடுத்து இன்று 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை விஜய் அறிவித்துள்ளார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் தனது நண்பரை களமிறக்கி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 23ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
தவெக வேட்பாளர் பட்டியல்: அதன் படி மார்ச் 29ந் தேதியான இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை விஜய் அறிவித்தார். இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிராக விஜய் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் திங்கட்கிழமை முதல் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

நண்பர் ஸ்ரீநாத்: இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் என் நண்பர் ஸ்ரீநாத் போட்டியிடுவதாக அறிவித்தார். விஜய் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் போது, என் நண்பர் ஸ்ரீநாத் என்று அன்போடு அழைத்து அறிமுகம் செய்தார். இதையடுத்து, விஜய் தனக்கே உரிய பாணியில் முத்தத்தை பறக்க விட்டார். அந்த நொடி அரங்கமே விசில் சத்தங்களால் நிரம்பி இருந்தது. நடிகர் ஸ்ரீநாத் விஜய் உடன் சேர்ந்து நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், வேட்டைக்காரன், மாஸ்டர் திரைப்படத்தில் நண்பராக நடித்துள்ளார்.
நடித்த படங்கள்: தனுஷூடன் உத்தமப்புத்திரன், குட்டி, சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை, ரவி மோகனுடன் தாம்தூம், சந்தோஷ் சுப்பிரமணியம், ஈரம், மாசிலாமணி, நினைத்தாலே இனிக்கும், வட்டாரம், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீநாத் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'லெக் பீஸ்' என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











