பல வதந்தி.. பொய்யான பிரச்சாரம்.. எதையும் நம்பாதீங்க.. இப்தார் விழாவில் விஜய் பேச்சு!

சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், விஜய் தொண்டர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார். மேலும்,

விஜய் பேச்சு: நான் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு பல விதமான வதந்திகள் சர்ச்சைகள் பரவின. அந்த டீம் இந்த டீம், என பல சர்ச்சைகள் வந்தன. அதன் பிறகு தான் இது மக்கள அணி என்பதை தெரிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுடைய திட்டம் நடக்காமல் போனதால், கடைசியில் இந்த விஜயை என்னதான் செய்து என நினைத்து தான், இந்த கூட்டணி, அந்த கூட்டணியில் சேரப் போகிறார் என பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Vijay Iftar speech

பலவிதமான வதந்தி: இந்த செய்தியை எல்லாம் கேட்டு, நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்து இருப்பீர்கள். இந்த இடத்தில் நான் ஓப்பனாக தெளிவாக ஒரு விஷயத்தை சொல்கிறேன். நாங்க எப்பவுமே மதசார்பற்ற, கொள்கை என்பதில், மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சி என்கிற நிலைப்பாட்டில், எப்பொழுதுமே நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நம் தலைமையில் தான் ஆட்சி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். என்னுடைய முதல் மாநாட்டில் நான் சொன்னது போல அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும், எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள மாட்டேன்.

வெற்றி நமதே: இதனால் யார் என்ன அவதூறுகளை பரப்பினாலும் தயவு செய்து அதை நம்பாதீர்க, எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம நினைச்ச ச டார்கெட்டை நம்மளால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள். அனைவரும் கான்பிடென்ட் ஆக இருங்கள் நல்லதே நடக்கும், வெற்றி நமதே என விஜய் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay speech விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X