2013ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலம் 'விஜய்'
சென்னை: 2013ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார்.
2013ம் ஆண்டுக்கு விரைவில் விடை கொடுக்கவிருக்கிறோம். இந்நிலையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்கள், தென்னிந்திய பிரபலங்கள், செல்போன்கள், அரசியல் தலைவர்கள், வார்த்தைகள் ஆகியவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களை பற்றி பார்ப்போம்.

விஜய்
2013ம் ஆண்டில் அதிகமானோர் கூகுள் செய்த தென்னிந்திய நடிகர் இளைதளபதி விஜய் தான். இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜீத்
விஜய்யை அடுத்து அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர் 'தல' அஜீத் குமார். அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீஸாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண்
தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். ஆனால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட டோலிவுட் நடிகர்கள் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.

சூர்யா
பவன் கல்யாணுக்கு அடுத்தபடியாக நம்ம சிங்கம் சூர்யாவை பற்றி தான் பலர் கூகுள் செய்துள்ளனர்.

மகேஷ் பாபு
பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

சன்னி லியோன்
விஜய் அதிகம் கூகுள் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அதே சமயம் இந்தியாவில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட பிரபலங்களில் சன்னி லியோன் தான் முதல் இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











