Vijay: விஜய் மட்டும் தான் இன்னும் பேச்சு மாறல... சூர்யா, கார்த்தி எல்லாம் இதுல செல்ஃபிஷ் தான்!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், லியோ தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யின் உறவினர் என்பதால், விஜய்யும் இந்தப் படத்திற்காக பணம் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

 Vijay: Tirupur Subramaniam opined that Vijay is better than Suriya and Karthi

இதுகுறித்து பேசியுள்ள சினிமா விநியோகஸ்தகர் திருப்பூர் சுப்ரமணியம், இந்த விஷயத்தில் சூர்யா, கார்த்தியை விட விஜய் தான் பெஸ்ட் எனக் கூறியுள்ளார்.

சூர்யா, கார்த்தியை விட விஜய் பெஸ்ட்:ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. அதன்பின்னர் தமிழில் அதிகம் எதிர்பார்ப்புடன் ரிலீஸாகவுள்ளது விஜய்யின் லியோ திரைப்படம் தான். விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் லியோவும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

 Vijay: Tirupur Subramaniam opined that Vijay is better than Suriya and Karthi

லலித் குமார் தனது உறவினர் என்பதால் தான், அவரது தயாரிப்பில் விஜய் தொடர்ந்து நடித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும், 7 ஸ்க்ரீன்ஸ் விஜய்யின் சொந்த நிறுவனம் தான் என்றும், அவருக்கும் இதில் ஷேர் இருப்பதாக செய்திகள் வெளியாகின. விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து பிரபல சினிமா விநியோகஸ்தகர் திருப்பூர் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் சூர்யா, கார்த்தியை விட விஜய் தான் சிறந்தவர் எனக் கூறியுள்ளார். அதாவது விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது படங்களை எஸ்.ஏ சந்திரசேகர் தான் தயாரித்தார். தனது மகனுக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கிடைக்கும் வரையில் அவரே ரிஸ்க் எடுத்து விஜய்யின் படங்களை தயாரித்து வந்தார். ஒருகட்டத்தில் விஜய் படங்கள் ஹிட் ஆனதும் தான் அவர் மற்ற தயாரிப்பாளர்களின் பேனரில் நடித்ததாகக் கூறியுள்ளார்.

 Vijay: Tirupur Subramaniam opined that Vijay is better than Suriya and Karthi

சத்யராஜ் தனது மகன் சிபிராஜ்ஜை வைத்து 2 படங்கள் தயாரித்தார். அதேபோல், இயக்குநர் பி வாசுவும் அவரது மகன் ஹீரோவாக நடித்த 2 படங்களை ஆரம்பத்தில் தயாரித்து பார்த்தார். ஆனால், இருவருமே அதன்பின்னர் ரிஸ்க் எடுக்கவில்லை. இதில், எஸ்.ஏ சந்திரசேகர் தான் விஜய்யை வளர்த்துவிட அதிகம் ரிஸ்க் எடுத்தார். அதேநேரம் சூர்யா, கார்த்தி இருவருக்காக சிவகுமார் படங்கள் தயாரிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

 Vijay: Tirupur Subramaniam opined that Vijay is better than Suriya and Karthi

ஆனால், சூர்யாவும் கார்த்தியும் இப்போது முன்னணி ஹீரோவாகிவிட்டதால், அவர்களது சொந்த தயாரிப்பில் மட்டுமே நடிப்போம் என பிடிவாதமாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் மற்ற தயாரிப்பாளர்கள் தான் இருவரையும் வைத்து படம் எடுத்தனர் என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. விஜய் மட்டுமே இந்த விஷயத்தில் பக்குவமாக நடந்துகொண்டார். தொடர்ந்து பல தயாரிப்பாளர்களுக்காக படங்களில் நடிப்பது விஜய் மட்டுமே என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X