அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகராகிறார் விஜய்...எவ்வளவு தெரியுமா
சென்னை : பாக்ஸ் ஆபீசில் அதிக வசூல் காட்டும் ஹீரோ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் விஜய் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
கொரோனா சமயத்தில் தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சமயத்திலும் இந்தியாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை பெற்றது விஜய் நடித்த மாஸ்டர் படம் தான்.
மாஸ்டர் படத்தை முடித்த கையோடு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்க போய் விட்டார் விஜய். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த வருகிறது. இந்த படமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான ஷுட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாம்.

பரபரக்கும் தளபதி 66
இதனால் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 66 ஐ இயக்க போவது யார் என்ற கேள்வி சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தேசிங்கு பெரியசாமியிடம் விஜய் கதை கேட்டது உண்மை தானாம். ஆனால் அது தளபதி 66 படம் கிடையாதாம். தளபதி 67 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தளபதி 66 டைரக்டர் இவரா
தற்போது ஹாட் நியூஸ் என்னவென்றால், விஜய்யின் தளபதி 66, தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளியுடன் தானாம். இந்த படத்தை தில் ராஜு தான் தயாரிக்கிறாராம். இது ஏற்கனவே கூறப்பட்டது தான் என்றாலும் இறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சமீபத்தில் வம்சியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்ட பாடகரும், நடிகருமான கிருஷ் இந்த சீக்ரெட்டை ஏற்கனவே கசிய விட்டிருந்தார்.

விஜய்க்கு அதிக சம்பளம்
தளபதி 66 ஐ இயக்க போவது வம்சி பைடிபள்ளி தான் என்பது பல மாதங்களுக்கு முன்பே முடிவாகி விட்டதாம். பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் ஒப்பந்தத்தில் விஜய்யும் கையெழுத்து விட்டாராம். அதுவும் தென்னிந்திய நடிகர்களிலேயே அதிக சம்பளத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாம்.

என்னது இத்தனை கோடியா
ஏற்கனவே தான் நடிக்கும் படங்களுக்கு 80 முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் விஜய். தளபதி 66 படத்திற்கு இதை விட கூடுதலாக, மேஜிக்கல் நம்பரில் சம்பளம் வாங்க போகிறாராம் விஜய். அனேகமாக 110, 120 , 150 என்ற எண்களில் கோடிகளை சம்பளமாக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியை முந்தும் விஜய்
அப்படி நடந்தால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை தளபதி 66 படத்தின் மூலம் விஜய் பெறுவார். தென்னிந்தியாவில் இதுவரை 100 கோடி சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் ரஜினி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். பாகுபலி படத்திற்காக பிரபாசுக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் 100 கோடிக்கும் கீழ் தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் தற்போது வரை விஜய் டாப் 5 பட்டியலில் தான் இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











