தளபதி 65 அடுத்த அப்டேட் ...விஜய்க்கு வில்லனாக 2 பாலிவுட் டாப் நட்சத்திரங்கள்

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் தியேட்டர் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட்ட போதிலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

Recommended Video

Thalapathy 65 வில்லன் இவர் தானா? புது Update | Thalapathy Vijay, Nelson Dilip

Vijay to face two notable Bollywood actors as villains in Thalapathy 65?

மாஸ்டர் வெற்றியை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்களை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜயின் அடுத்த படமான தளபதி 65 ஐ சன் பிக்சர்ஸ் தயாரிப்பது ஏற்கனவே தெரிந்த தகவல்.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய மனோஜ் பரஹம்சாவிடமும், ஹீரோயினாக பூஜா ஹெக்டோ அல்லது ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்போது லேட்டஸ் அப்டேட்டாக, தளபதி 65 ல் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் மற்றம் வித்யுத் ஜம்வால் ஆகிய இரண்டு பாலிவுட் நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வித்யுத் ஜம்வால் ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் மற்றும் வித்யுத் இடையேயான காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நவாசுதீன் சித்திக், அதிக சம்பளம் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். தற்போது தளபதி 65 ல் நடிக்க அவர் ஒப்புக் கொண்டால், தமிழில் மற்றொரு மெகா ஸ்டாரின் ஹிட் படத்தில் நடித்த பெருமை கிடைக்கும்.

இது போன்ற இன்னும் பல சுவாரஸ்ய அப்டேட்கள் தளபதி 65 குறித்து வெளியாக காத்திருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X