விரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு!

By

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட இருக்கிறது.

நடிகர் விஜய்யின், 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை நடிகர் விஜய் உடனடியாக மறுத்தார்.

விஜய்க்கு தெரியாது

விஜய்க்கு தெரியாது

இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயன்றது நான்தான் என்றும் அது விஜய்க்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். அதற்கு நடிகர் விஜய் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்பும் இல்லை

தொடர்பும் இல்லை

'அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் கூறினார்.

முயற்சியை கைவிட்டார்

முயற்சியை கைவிட்டார்

இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், அந்த அரசியல் கட்சி முயற்சியை கைவிட்டார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

என்னோட INSPIRATION DHANUSH SIR தான் | ACTOR NAVIN KUMAR CHAT PART-01 | FILMIBEAT TAMIL
புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த்

இந்த யூடியூப் சேனல் வாயிலாக, நடிகர் விஜய் எடுக்கும் முடிவு மற்றும் அவர் தொடர்பான செய்திகளை வெளியிடவும் விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X