யாரு அந்த பிரகாஷ்?.. விஜய் முதல் விஜய் சேதுபதி வரை.. பட்டியல் போட்டு பறக்கும் விடாமுயற்சி மீம்!

சென்னை: பிரேக்டவுன் படத்தை தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக சில விஷயங்களை இயக்குநர் மகிழ் திருமேனி மாற்றியமைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். அதில், முக்கியமான விஷயமாக த்ரிஷாவுக்கு பிரகாஷ் என்பவர் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது என்பதுதான்.

அஜித் குமாரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டு அந்த பிரகாஷ் உடன் வாழ்வதற்காகத்தான் அவர் அம்மா வீட்டுக்கே செல்ல முனைகிறார். மனைவியை விமானத்தில் ஏற்றி அனுப்பியிருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

vidamuyarchi vijay trisha

கடைசியாக ஒருமுறை ரோடு ட்ரிப் போவோம். உங்க வீட்டுக்கு நானே உன்னை கொண்டு போய் விடுகிறேன் என கூட்டிக் கொண்டு வந்து அர்ஜுனிடம் சிக்க வைத்து விட்டார் அஜித் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. அதையெல்லாம் தாண்டி கடைசி வரைக்கும் அந்த பிரகாஷை கண்ணுலயே காட்டலையேப்பா என்றும் யாரு அந்த பிரகாஷ்? என மீம்களும் பறக்கும் அளவுக்கு சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமே கிளம்பியிருக்கிறது.

vidamuyarchi vijay trisha

தேவையில்லாத ஆணி: அஜித் குமாரை விட்டுவிட்டு இன்னொருத்தரை த்ரிஷா காதலிக்கும் அளவுக்கு அந்த நபர் த்ரிஷா மீது என்ன அன்பு காட்டினார் என்றோ, அந்த நபர் யார் என்பது குறித்தோ எந்தவொரு காட்சியையும் வைக்காமல் வெறுமனே பிரகாஷ் என்பவரை த்ரிஷா கள்ளத்தனமாக காதலிக்கிறார் என்பதை மட்டுமே வசனங்கள் வாயிலாக வைத்து ரசிகர்களை குழப்பியுள்ளனர் என்றும் இந்த படத்துக்கும் கதைக்கும் அது தேவையில்லாத ஆணி என்றும் கடைசியில் த்ரிஷாவை அஜித் காப்பாற்றியதும் மீண்டும் அவருடனே சேர்ந்து விடுகிறார். அப்போதும் பிரகாஷை காட்டவே இல்லை என்கின்றனர்.

த்ரிஷா காதலித்தாரா?: கயல் எனும் கதாபாத்திரத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்த த்ரிஷா மிஸ்கேரேஜ் ஆன பின்னர் தன்னை அர்ஜுன் (அஜித்) கவனித்துக் கொள்ளவில்லை என்றும் அக்கறை காட்டவில்லை என்றும் விவாகரத்து கேட்கிறார். ஆனால், 12 வருஷத்துக்குப் பிறகு அவர் எந்தளவுக்கு காதலை பொழிந்தார் என்பதற்கான எந்தவொரு சீனும் இல்லை. மேலும், அதுதான் பிரச்சனை என்றால் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்திருக்கலாமே என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஜய் முதல் விஜய் சேதுபதி வரை: யாரு அந்த பிரகாஷ்? என்பதை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விவாதமாகவே மாற்றிவிட்டனர். கில்லி படத்தில் வரும் செல்லம் பிரகாஷ் ராஜா?, விஜய்யா? அல்லது 96 பட விஜய் சேதுபதியா? என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X