Vijay: மங்காத்தா மாதிரி படம் பண்ணலாம்ன்னு விஜய் சொன்னார்... கொளுத்திப் போட்ட கங்கை அமரன்

சென்னை: லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைக்கவுள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் - வெங்கட் பிரபு இணையும் இப்படம் குறித்த அபிஸியல் அப்டேட் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்தப் படத்திற்கு CSK என டைட்டில் வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தளபதி 68 படம் குறித்து கங்கை அமரன் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

 Vijay told Venkat Prabhu that he wanted to make a film like Mankatha

மங்காத்தா மாதிரி உருவாகிறதா தளபதி 68?:விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது உறுதியானது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் - வெங்கட் பிரபு - யுவன் என மாஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் தளபதி 68 படம் என்ன ஜானரில் உருவாகவுள்ளது என இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில், தளபதி 68 குறித்து வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேசியது வைரலாகி வருகிறது.

 Vijay told Venkat Prabhu that he wanted to make a film like Mankatha

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கங்கை அமரனிடம் தளபதி 68 பற்றி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கை அமரன், "மங்காத்தா வெளியாகியிருந்த போது படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை விஜய் ரொம்பவே பாராட்டினார். இந்த மாதிரி கேரக்டர்ன்னு சொல்லிருந்தா நானும் நடிச்சிருப்பேன்ல" எனவும் விஜய் கூறினாராம்.

தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய், "மங்காத்தா மதிரி ஒரு கதை இருந்தா சொல்லுங்க சேர்ந்து பண்ணலாம்" என அப்போதே கூறியிருந்ததாக கங்கை அமரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதனால் தற்போது அப்படியான கதை ஒன்று மனதுக்குள் தோன்றியதால் உடனே அதனை விஜய்யிடம் சொல்லி படம் ஓக்கே ஆகிவிட்டதாக கங்கை அமரன் கூறியுள்ளார். மங்காத்தா படம் வெளியான போது அவர்கள் பேசியது இப்போது நடக்கவுள்ளது என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

 Vijay told Venkat Prabhu that he wanted to make a film like Mankatha

கங்கை அமரனின் இந்த பேட்டியால் விஜய் - அஜித் ரசிகர்கள் வழக்கம்போல தங்களது சண்டையை ஆரம்பித்துவிட்டனர். ஆயிரம் இருந்தாலும் அஜித் ஸ்டைலுக்கு விஜய் நடிக்க முடியாது என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனது. அதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னதாக "தளபதி 68 படத்தில் அஜித் நடிக்கவில்லை. விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிப்பது எங்க அப்பாவோட ஆசை" என வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X