வெள்ளை கொடிக்கு வேலை வந்துவிட்டது.. ஜனநாயகன் ரிலீஸ் ஆக இது ஒன்றே வழி.. விஜய்யின் திடீர் யூடர்ன்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் படம் ஜன நாயகன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 9ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் படக்குழு சென்சாருக்கு வேண்டி வழக்கு தொடர, இந்த வழக்கு விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, படத்திற்கு சென்சார் வழங்க உத்தரவிட்டார். ஆனால் சென்சார் தரப்பில் மேல்முறையீட்டுக்கு போகவே, மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, வழக்கை சரியாகவும் முறையாகவும் விசாரிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் தற்போது முக்கிய முடிவு எடுத்துள்ளராம். அதாவது, வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, சென்சார் குழுவினர் என்ன சொல்கிறார்களோ, அதை செய்துவிட்டு படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் வேலையை செய்யலாம் என்று முடிவு எடுத்து விட்டாராம். இதனால் சென்சார் பெறுவதற்காக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவோ, அல்லது சென்சார் நிறுவனம் தெரிவிக்கும் கட்களை செய்யவோ தயாராக இருப்பதாக வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். இந்த முடிவை விஜய் தான் எடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கு வாபஸ் வாங்கப்பட்டு, படத்திற்கு சென்சார் கிடைத்து படம் வெளியாக எப்படியும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











