கேரளாவில் கெத்து காட்டும் தளபதி.. தமிழ்நாட்டு ஃபார்முலாவை கையில் எடுத்த விஜய்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் கேரளாவில் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Vijay Took Selfie With His Fans in Kerala at yesterday

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கேரளா சென்ற விஜய்: அதனையடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. க்ளைமேக்ஸ் ஷூட்டிங் தற்போது கேரளாவில் தொடங்கி நடந்துவருகிறது. இதனையொட்டி விஜய் நேற்று முன் தினம் கேரளா சென்றார். அங்கு சென்ற அவருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விஜய் சென்றபோது சாலையின் இருபுறங்களிலும் ரசிகர்கள் நின்றிருந்தனர். அவரைத் தொடர்ந்து கேரளாவுக்கு சென்ற இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தமிழ்நாட்டு ஃபார்முலா: இந்நிலையில் விஜய் கேரளா சென்றதை அடுத்து நேற்றிலிருந்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டை அறிந்துகொண்ட ரசிகர்கள் அங்கும் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். இதனையடுத்து அங்கு இருந்த ஷூட்டிங் வேன் மீது ஏறிய விஜய் தன்னுடைய ஸ்டைலில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அது அங்கிருந்த ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டாலும் விஜய் இதே ஃபார்முலாவைத்தான் கடைப்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X