மங்காத்தாவுடன் மோதுவதை பற்றியெல்லாம் கவலையே இல்லையா?.. தெறி ரீ ரிலீஸ் குறித்து விஜய் எடுத்த முடிவு
சென்னை: நடிகர் அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. தமிழ் திரையுலகில் ரீ ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக மங்காத்தா உருவெடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் மங்காத்தா ரீ ரிலீஸ் தினத்தில் நடிகர் விஜயின் தெறி படமும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். அதன் பின்னர் சில காரணங்களால் தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு காரணமே நடிகர் விஜய் தான் என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அதாவது மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ஆனது ஜனவரி 23ஆம் தேதி என்று சன் பிக்சர்ஸ் நிறுவனமானது புத்தாண்டு தினத்தன்று தெரிவித்தது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாததிலேயே படத்தின் ரீ ரிலீஸ் புரோமோஷனைத் தொடங்கிவிட்டது. இப்படி இருக்கையில் நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் வெளியாகவில்லை.
இப்படி இருக்கையில் நடிகர் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் இருந்தனர். படம் இந்த வாரம் வெளியாகும் அடுத்த வாரம் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படமான தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு முடிவெடுத்தார். அதன் பின்னர் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மங்காத்தா - தெறி: இதனால் அஜித்தின் மங்காத்தா படத்துடன் விஜயின் தெறி படம் ரீ ரிலீஸ் ஆகிறதே என்ற சூழல் உருவாகியது. அதன் பின்னர் தாணு தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். முதலில் திரௌபதி 2, ஹாட் ஸ்பாட் 2 உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்காக படத்தின் ரீ ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
விஜய் எடுத்த தீர்க்கமான முடிவு: ஆனால் அவர்களின் கோரிக்கை மட்டும் காரணம் இல்லை என்றும் மிகவும் முக்கியமான காரணமே விஜய் தான் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். அதாவது, ஜன நாயகன் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும்போது, தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்தால், ரசிகர்கள் மத்தியில் ஜன நாயகன் படம் வெளியாகாமல் போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். எனவே தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால் தான் படத்தை தாணு ரீ ரிலீஸ் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சைக் கேட்ட இணையவாசிகள் சிலர் அப்படியானால் அஜித் படத்துடன் தனது படம் மோதுவது விஜய்க்கு பிரச்னை இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











