தயாரிப்பாளர் உதயநிதிக்கு விஜய் தான் பர்ஸ்ட், சூர்யா செகண்ட், அஜீத் தேர்ட்
சென்னை: தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய்யை வைத்து படம் பண்ணவே பிடிக்குமாம்.
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ ஆனார். இதையடுத்து அவர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது.
படத்தில் உதயநிதி நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது.

விளம்பர நிகழ்ச்சி
படம் ரிலீஸாவதற்கு முன்பு இது கதிர்வேலன் காதல் படக்குழு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்திற்கு விளம்பரம் தேடியது.

ஹீரோக்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதியிடம் நீங்கள் எந்தெந்த ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பப்படி ஹீரோக்களை வரிசைப்படுத்தவும் என்று கேள்வி கேட்கப்பட்டது.

விஜய்
விஜய், சூர்யா, அஜீத், தனுஷ் மற்றும் சிம்புவை வைத்து படம் தயாரிக்க விரும்புவதாக உதயநிதி தெரிவித்தார். உதயநிதி வரிசைப்படுத்திய நாயகர்களில் விஜய்க்கு தான் முதலிடம்.

உதயநிதி
தான் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி தனக்கு பிடித்த ஹீரோவை வைத்து குருவி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா
சூர்யா நடித்த ஏழாம் அறிவு, ஆதவன் ஆகிய படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். அஜீத், தனுஷ், சிம்பு படங்களை அவர் இன்னும் தயாரிக்கவில்லை. உதயநிதி சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை வினியோகம் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











