ப்பா.. என்னவொரு வெறித்தனம்.. சைக்கிள் ஓட்டி வந்து ஓட்டுப் போட்ட விஜய்.. தெறிக்கும் டிரெண்டிங்!

சென்னை: பிகில் படத்தின் ஓப்பனிங் பாடலில் வருவது போல செம வெறித்தனமாக சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்களித்தது தான் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

#ELECTION BREAKING: சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்!

இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் தளபதி விஜய்யின் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏகப்பட்ட தளபதி ரசிகர்களும் #Vijay ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஆஃப் ஸ்க்ரீனிலும்

ஆஃப் ஸ்க்ரீனிலும்

ஆன்ஸ்க்ரீனில் மட்டுமல்ல ஆஃப் ஸ்க்ரீனிலும் தான் கெத்து தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் தளபதி விஜய். சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வெறித்தனமாக ஓட்டி வந்து விஜய் வாக்கு போடும் வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் செம டிரெண்டாகி வருகின்றன.

செம ஃபிட்னஸ்

செம ஃபிட்னஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்திற்காக செம ஃபிட்டாக மாறி உள்ளார் நடிகர் விஜய். ரசிகர்கள் மற்றும் போலீசார் பைக் சூழ நடிகர் விஜய் சைக்கிள் ஓட்டி வந்து ஓட்டுப் போடும் வீடியோக்களை ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலைவாசி

பெட்ரோல், டீசல் விலை 90 ரூபாயை கடந்து மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது கோபத்தை வாக்கு மூலமாக செலுத்தி விட்டு சென்றிருக்கிறார் என்றும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

கூடிய கூட்டம்

தளபதி விஜய் சைக்கிள் ஓட்டி வந்து வாக்குச் சாவடி மையத்தில் ஓட்டுப் போடுவதை அறிந்ததும் அங்கே இருந்த மக்கள் மற்றும் மீடியாக்கள் அனைவரும் பெருந்திரளாக கூடி விஜய்யை பார்க்கவும் வீடியோ எடுக்கவும் முண்டியடித்தனர். வாக்குச்சாவடி மையத்திலும் கூட்ட நெரிசலுக்கு நடுவே தனது வாக்கினை செலுத்தினார் விஜய்.

பைக்கில் ஏறி சென்றார்

பைக்கில் ஏறி சென்றார்

வாக்களித்து முடித்தவுடன் நடிகர் விஜய் தான் ஓட்டி வந்த சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பாமல் கூட்ட நெரிசல் காரணமாக பைக்கில் ஏறி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தளபதி விஜய்யின் இந்த அதிரடி செயல் இணையத்தை கலக்கி வருகிறது.

அஜித் சைக்கிளிங்

அஜித் சைக்கிளிங்

சமீபத்தில் தல அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்நிலையில், நடிகர் விஜய்யும் சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்து இருப்பது குறித்தும் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இருவரும் பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தி உள்ளார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X