திரிஷாவுடன் விஜய்.. சங்கீதாவுடன் சேர வேண்டுமென்று முட்டி போட்டு பிரார்த்தனை.. யார் சார் நீங்க?
சென்னை: சங்கீதா விவாகரத்து கேட்ட பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வந்தது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் அண்ணா இப்படி செய்திருக்கவே கூடாது என நேற்று இரவிலிருந்தே சோஷியல் மீடியாவில் புலம்பிவருகிறார்கள். உங்களுக்கு திரிஷா வேண்டாம் அண்ணா; சங்கீதா அண்ணியை நினைத்து பாருங்கள் என்று பாசத்தோடு அட்வைஸ் செய்கிறார். ஆனால் இவர்களில் சிலர்தான் சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவை தரக்குறைவாக பேசியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. விஜய் மீது சங்கீதா தனது மனுவில் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்தான்; திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு விஜய்யின் முதுகில் குத்திவிட்டார்; என்ன நடந்தாலும் சரி நாங்கள் விஜய் அண்ணாவுக்கு துணை நிற்போம் என்று சகட்டு மேனிக்கு வாள் சுழற்றினார்கள் தளபதி ரசிகர்கள்.

விஜய் செய்த செயல்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் தயாரிப்பாளரின் மகன் திருமணத்துக்கு ஒரே காரில், ஒரே கலர் டோன் ட்ரெஸ்ஸில் விஜய்யும், திரிஷாவும் நேற்று வந்தார்கள். ஜோடியாக வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து; ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு; ஜோடியாகவே ஒரே காரில் கிளம்பி சென்றார்கள். அவர்கள் அப்படி வந்து சென்றது அந்தத் திருமண மண்டபத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஏன் அண்ணா இப்படி?: விஜய் இப்படி செய்வார் என்று அவரது ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சங்கீதா குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதானா என பலர் சந்தேகித்தார்கள். அதற்கு அவர்களால் எவ்வளவு முட்டு கொடுக்க முடியுமோ கொடுத்தார்கள். ஆனால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் திரிஷாவுடன் வந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கதறுகிறார்கள். பலரும், இனியும் தவெகவில் இருந்தால் சரிப்பட்டு வராது என பொட்டியை கட்ட தொடங்கிவிட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச இமேஜையும் காலி செய்துகொண்டாரே என புலம்புகிறார்கள்.
ரசிகர் செய்த செயல்: இப்படி விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் இருக்கும் சூழலில்; நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ரசிகர் ஒருவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது, விஜய்யும், சங்கீதாவும் சேர்ந்து வாழ வேண்டும் என அவர்கள் இருக்கும் புகைப்படத்தை கைகளில் பிடித்தபடி முட்டி போட்டுக்கொண்டு ரசிகர் ஒருவர் வேண்டுதலை வைத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ, விஜய் ஜாலியாகத்தான் இருக்கிறார். நீங்கள் எல்லாம் ஏன் இப்படி உங்களை வருத்திக்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பாரா விஜய்?: விஜய் ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்து சங்கீதாவுடன் அவர் சேர்ந்து வாழ வேண்டும்; அல்லது விவாகரத்து கொடுத்துவிட்டு அடுத்தக்கட்ட வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். அதுவரை இதுபோன்ற எந்த சர்ச்சையிலும் சிக்க வேண்டாம் என்பதுதான் ஆசை. விஜய்யோ அதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பாரா விஜய். பொறுத்திருந்து பார்க்கலாம்..


Click it and Unblock the Notifications











