த்ரிஷாவுடன் விஜய்.. இதுக்கு எல்லாம் முட்டு கொடுக்க முடியாது விஜய் அண்ணா.. பிரபலமே விளாசி விட்டுட்டாரு
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் மற்றும் தமிழ்நாடு திரைத்துறை என மொத்தமாக பேசிக் கொண்டிருப்பது நடிகர் விஜய் - த்ரிஷா இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டது தான். பலரும் விஜய்யை கடுமையாக விமரிசித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் விஜய்யின் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷாவுடன் விஜய் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இதுக்கு எல்லாம் முட்டு கொடுக்க முடியாது: இது தொடர்பாக விமர்சகர் பாண்டா பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகிறார். அதில் ஒரு போஸ்ட்டில், " இதுக்கு எல்லாம் முட்டு கொடுக்க முடியாது அண்ணா. குடும்பம் தான் ஃபர்ஸ்ட், மத்தது எல்லாம் அதுக்கு அப்புறம் தான்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், அவரது மற்றொரு போஸ்ட்டில், விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல விஜய் அண்ணா. நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு - அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும் ! இத யோசிக்க முடியலேன்னா , மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க ? சரி இல்ல !" என்றும் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

தவெகவில் இருக்காதீங்க: அதேபோல் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக காரில் வந்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்து, வாழ்க என்று சர்காஸ்டிக்காக பதிவிட்டுள்ளார். அதேபோல், விஜய் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார். தவெகவில் இருந்து வெளியேறி, திமுக, அதிமுக அல்லது பாஜக அல்லது காங்கிரசில் சேர்ந்து, உங்களுக்கான அரசியல் எதிர்காலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்! அதேபோல் விஜய் ரசிகர்கள் உண்மையிலேயே அரசியலில் உயர விரும்பினால், தவெகவில் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இவரது இப்படியான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











