ஆஸ்திரேலியாவில் ஒன்றாக நிலம் வாங்கிய விஜய் த்ரிஷா?.. ஆதாரத்தை வெளியிடவா என சவால் விடும் பிரபலம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைக்கு பிறகும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதில் விஜய்யை அதிகம் விமர்சிக்கும் நபர் என்றால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன். இவர் நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகத்தை அவரது பாணியில் விமர்சிப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இப்படி எல்லாம் கலாய்க்கலாமா என்று பலரும் யோசிக்கும் வகையில் எல்லாம் விஜய்யையும் அவரது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசுகையில் விஜய் மற்றும் திரிஷா குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் பகீர் கிளப்பி உள்ளது.
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் மற்றும் திரிஷா குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்து பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிலம்: அதாவது நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அவரது சொத்துக்கள் சிலவற்றை விற்றார் என்ற தகவல் இணையத்தில் பரவியது. இது தொடர்பாக அரசியல் தளத்திலும் பேச்சுக்கள் அடிபட்டது. இப்படி இருக்கையில் இதற்கு காரணம் தேர்தல் செலவுகளுக்காக என்று விஜய்க்கு ஆதரவாக பேசியவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் நடிகர் விஜய் தனக்கு சென்னையில் இருந்து சொத்துக்களை விற்றுவிட்டு ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கியுள்ளார் என்றும், ஆஸ்திரேலியாவில் விஜய் வாங்கியுள்ள நிலத்துக்கு பக்கத்திலேயே திரிஷாவுக்கும் நிலம் வாங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனை விஜய் மறுப்பார் என்றால், இது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.
ஆதரங்களை வெளியிடுவேன்: விஜய் மற்றும் திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்கள் என்று இவர் தெரிவித்துள்ள கருத்தும், அது மட்டுமில்லாமல் இதை மறுத்தால் இது தொடர்பான ஆவணங்களையும் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ள கருத்தும் அரசியல் தளத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால் இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகமும் நடிகர் விஜய்யும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இணையவாசிகள் சாட்டை துரைமுருகன் விஜய் விமர்சிக்க வேண்டும் என்ற வன்மத்துடன் உண்மைக்கு மாறான தகவல்களை கைதட்டல்களுக்காக தெரிவித்து வருகிறார். உண்மைக்கு மாறான தகவல்களுக்கு தமிழக வெற்றிக்கழகமோ அல்லது நடிகர் விஜய்யோ பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

இரண்டு தொகுதிகளில் விஜய்: நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய்.


Click it and Unblock the Notifications











