ரவி மோகன் - கெனிஷாவை காப்பியடித்த விஜய் - த்ரிஷா.. விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் செம்ம ட்விஸ்ட்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஜோடியாக தயாரிப்பாளர் கல்பாத்தி இல்லத் திருமண விழாவிற்கு சென்று கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் விஜய் மற்றும் த்ரிஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த திருமண நிகழ்ச்சிக்கு இருவரும் ஜோடியாக ஒரே மாதிரியான நிற ஆடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
இன்னும் சொல்லப்போனால் விஜய் பட்டு வேட்டி , பட்டு சட்டையிலும் அதற்கு மேட்சிங்காக த்ரிஷாவும் பட்டுப் புடவை அணிந்து கொண்டும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதைப் பார்த்த பலரும் இது நடிகர் ரவி மோகன் தனது விவாகரத்து சர்ச்சைக்குப் பின்னர் பாடகியும் தனது தோழியுமான கெனிஷாவுடன் தயாரிப்பாளர் வேல்ஸ் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். இவரும் ஒரே மாதிரியான பட்டாடை உடுத்தி வந்து கலந்து கொண்டனர்.

விஜய் - த்ரிஷா: அதேபோல் நடிகர் விஜய் தனது விவாகரத்து சர்ச்சைக்குப் பின்னர் நடிகையும் தனது நெருங்கிய தோழியுமான த்ரிஷாவுடன் இணைந்து கொண்டு கல்பாத்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் விஜய் மற்றும் த்ரிஷா பின்பற்றும் இந்த டிரஸ் கோட் முறையானது நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா ஏற்கனவே பின்பற்றி விட்டார்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
விவாகரத்து சர்ச்சை: விஜய் மனைவி தனது விவாகரத்து கோரிக்கை மனுவில், நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் பழகி வருகிறார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களை நான் சமர்ப்பிக்கிறேன். இது மட்டுமல்லாமல், விஜய் தரப்பில் ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டால் நடிகையின் பெயரை வெளியிடவும் செய்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.



Click it and Unblock the Notifications











