விஜய் பற்றி திரிஷாவிடம் கேளுங்கள்.. விஜய்யின் முன்னாள் மேனேஜரே இப்படி சொல்லிட்டாரே.. அடுத்த சர்ச்சை

சென்னை: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. விமர்சனங்களை தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பலர் பொது வெளியில் பேசிவருகிறார்கள். சமீபத்தில்கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் - திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். வியாபாரம் மட்டுமின்றி உச்சபட்ச சம்பளத்தையும் அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. இப்படி தனது கரியர் பீக்கில் இருக்கும்போது சினிமாவைவிட்டு ஒதுங்கி அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவர் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விஜய் மீது விமர்சனம்: கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் 2.0வாக இருக்கிறார். எப்போதும் பொதுவெளிகளில் அமைதியாகவும், குறைவாகவும் பேசும் விஜய்; இப்போது ஆளே மாறிவிட்டார். திமுகவை சகட்டுமேனிக்கு விமர்சித்துவருகிறார். அவரது விமர்சனத்துக்கு திமுகவினரும் தகுந்த பதிலடியை கொடுத்துவருகிறார். முக்கியமாக தன்னுடைய பேச்சில் ஊறுகாய்க்குகூட பாஜகவை எதிர்க்க மறுக்கிறார்; எனவே பாஜகவின் பி டீம்தான் என்ற விமர்சனமும் எழுந்துவருகிறது.

Vijay Trisha Row Former Manager PT Selvakumar s Explosive Statement Goes Viral
Photo Credit:

தனிப்பட்ட வாழ்க்கை: மேலும் விமர்சனம் என்கிற பெயரில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சிலர் இழுக்கிறார்கள். குறிப்பாக திரிஷாவுடன் அவரை இணைத்து வைத்து பலர் பேசுகிறார்கள். சமீபத்தில்கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "விஜய் முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும்" என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஆனால் அவரோ இதுவரை சின்ன வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.

பி.டி.செல்வக்குமார் பேச்சு: இந்நிலையில் விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் விஜய்யுடன் இருந்தேன். ஆனால் இப்போது புதிதாக பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவரது தாய், தந்தை, மாமா உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டார்கள். அவரது ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அவருக்காக உண்மையாக உழைத்தவர்கள் இப்போது அவருடன் இல்லை. விஜய்க்கு முதன்மை தளபதியாக இருந்தன் நான். ஆனால் என்னை ஓரங்கட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

திரிஷாவிடம் கேளுங்கள்: விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும். திரிஷாவிடம் கேளுங்கள். அவங்க சரியா சொல்வாங்க. விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என சொல்ல முடியாது. சமீபத்தில் சினேகா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போதுகூட நிறைய கூட்டம் கூடியது" என்றார். முன்னதாக விஜய்யிடம் பல வருடங்கள் மேலாளராக இருந்தவர் பி.டி.செல்வக்குமார். இவர்தான் புலி படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் திமுகவில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X