த்ரிஷா விவகாரம்.. சொந்தப் பிள்ளைகளின் வலியை யோசிக்காத விஜய் மக்களை எப்படி யோசிப்பார்? பிரபலம் கேள்வி
சென்னை: மொத்த இணையமும் விஜய் த்ரிஷா இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து தான் பேசிக் கொண்டு உள்ளது. இருவரும் ஜோடியாக அதுவும் ஒரே காரில் நிகழ்ச்சிக்கு வந்து, ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் ஒரே மாதிரி அதாவது விஜய் பட்டு வேட்டி, பட்டு சட்டையும் த்ரிஷா பட்டுப் புடவையும் அணிந்து ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக பலரும் விஜய் மற்றும் த்ரிஷாவை கண்டித்து வருகிறார்கள். அதற்கு காரணம் விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்திற்கு விண்ணப்பித்த பின்னர், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இப்படி இருக்கையில் சினிமா விமர்சகரும் விஜய் ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி விஜய்யின் இந்த செயல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, " விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல விஜய் அண்ணா ! நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு - அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும் ! இத யோசிக்க முடியலேன்னா , மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க ? சரி இல்ல !" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பிரசாந்த் ரங்கசாமியின் இந்த கருத்துக்கு ஆதரவும் பெருகி வருகிறது.



Click it and Unblock the Notifications











