யப்பா இது விஜய் இல்லைப்பா.. பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு.. வேறலெவலில் வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து ரசிகர்களை ’கோட்’ படத்தின் கெட்டப்பிலேயே சந்தித்து வரும் நிலையில், அஜித் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் கெடா விருந்தே கிடைச்சிருக்கு என தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். ”எப்படி இருந்த நான்” என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்த நிலையில், நடிகர் விஜய்யை மலையாள பட நடிகையாகவே மாற்றி விட்டனர்.

லியோ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு லுக்கில் நடிகர் விஜய் நடித்திருந்தார். பார்த்திபன் லுக் ரொம்பவே வயதான லுக்காக இருக்கிறது. நல்லா இல்லை என ரசிகர்கள் கமெண்ட் பண்ணினாலும் படத்தில் பார்த்திபன் லுக் கன்வின்ஸிங்காகவே இருந்தது.

Vijay trolled with Mamitha Baiju hair style trending on social media


கேரள ரசிகர்களுக்காக: பல ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் நடிகர் விஜய் படப்பிடிப்பை நடத்தி வரும் நிலையில், எந்தவொரு நெகட்டிவிட்டியும் இல்லாமல் தளபதிக்கு கேரள ரசிகர்கள் உச்சகட்ட அன்பை செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய்யை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்றும் அவருடன் செல்ஃபி எடுத்து விட வேண்டும் என்றும் பலர் முயற்சித்து வருகின்றனர். அப்படி தன் மீது அன்பு செலுத்தும் கேரள ரசிகர்களுக்காக படத்தின் லுக் எல்லாம் வெளியே தெரிந்தாலும் பரவாயில்லை என தொடர்ந்து நடிகர் விஜய் சூட்டிங் முடிந்ததும் சில மணி நேரங்கள் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

Vijay trolled with Mamitha Baiju hair style trending on social media

ட்ரோலாகும் விஜய் லுக்: நடிகர் விஜய் மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்து விட்டார் என அவரது லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் லுக்கை பார்த்து பலரும் கலாய்த்து வரும் நிலையில், எப்படி இருந்த நான் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டவர்களும் ட்வீட் போட்டூ ட்ரோல் செய்து வருகின்றனர். திருப்பாச்சி சீனை ரீக்ரியேட் பண்ணிட்டாரே வெங்கட் பிரபு என்றும் விஜய் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை இப்படியெல்லாம் லுக் வைத்து நடிக்க வைத்து வருகிறாரே என நக்கல் அடித்து வருகின்றனர்.

மமிதா பைஜு: நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் அண்ணனும் பிரேமலு ஹீரோயின் ஃபேனாக மாறிவிட்டாரோ என்றும் அப்பா இது நம்ம தளபதி இல்லைப்பா பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜுப்பா என்றும் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த கோட் படம் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் கூத்தை பார்க்கணுமோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X