அது என்னய்யா அரபிக்குத்து...அனிருத், நெல்சனை வேற லெவலில் கலாய்த்த விஜய்

சென்னை : பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளிற்கான ப்ரோமோவில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தை விஜய் கலாய்த்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் மாறி மாறி கலாய்த்து கொண்டதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்துள்ளது. இதற்காக ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டது. இந்த ப்ரோமோ வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்த வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமாரை விஜய் கலாய்த்துள்ளது தான் ஹைலைட்டே.

அனிருத் போட்ட அரபிக்குத்து

அனிருத் போட்ட அரபிக்குத்து

டாக்டர் படத்திற்கு பாடல் தயார் செய்து கேட்பதற்காக சிவகார்த்திகேயனும், நெல்சன் திலீப்குமாரும் அனிருத்தை பார்க்க வந்திருப்பார்கள். அதே போலவே இந்த ப்ரோமோ வீடியோவிலும் நெல்சன் மற்றும் அனிருத் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பீஸ்ட் படத்திற்காக அரபிக்குத்து தயார் செய்வதாக அனிருத் சொல்ல, அரபிக் பாடலாசிரியரை கூட்டி வர சொல்கிறார். நெல்சனும் புலம்பியபடி சென்று சிவகார்த்திகேயனுக்கு போன் செய்ய, அவரும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்.

பீஸ்ட் பாட்டு ரெடி

பீஸ்ட் பாட்டு ரெடி

மூன்று பேரும் சேர்ந்து, ஹலமத்தி ஹபி போ...ஹலமத்தி ஹபி போ என போனில் பாடிக் காட்டுகிறார்கள். அப்போது விஜய் கலாய்க்கும் டயலாக் தான் தற்போது டிரெண்டிங் ஆகி உள்ளது. அனிருத், விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட் பாட்டு ரெடி சார் என்கிறார். அதற்கு விஜய், ஃபஸ்ட் பாட்டே இப்போ தான் ரெடி பண்ணுறீங்களா. சூப்பர். எப்படி வந்திருக்கு என கேட்கிறார். நன்றாக வந்திருக்கு சார் என்ற அனிருத்திடம் என்ன பாட்டு என கேட்கிறார் விஜய். அனிருத், உடனடியாக அரபிக்குத்து பாட்டு என்கிறார்.

 அனிருத்தை கலாய்த்த விஜய்

அனிருத்தை கலாய்த்த விஜய்

இதற்கு கேட்டு ஜர்க் ஆகும் விஜய், என்னது...புரியல. அரபிக் ஓகே, குத்து ஓகே. அது என்னய்யா அரபிக்குத்து என கேட்கிறார். இடையில் குறுக்கிடும் நெல்சன், அது இப்போ தான் சார் அனிருத் கண்டுபிடிச்சிருக்கார் என்றார். இதை கேட்டு நக்கலாக சிரிக்கும் விஜய், கண்டுபுடிக்கிறீங்களா...என்னய்யா சைன்டிஸ்ட் மாறி பேசுறீங்க என சொல்லி விட்டு, பாடிக் காட்டு என கேட்கிறார். பாட்டை ஒரு வரி கேட்டதுமே, ஒரு நிமிஷம். ஒன்னும் புரியல. நீங்க ரெண்டு பேரும் முழு பாட்டையும் எழுதி விட்டு நாளை மாலை 6 மணிக்கு என்னை வீட்டில் வந்து பாருங்க. உங்களை எல்லாம் நம்ப முடியாது. கொஞ்சம் அசந்தா என்னையே முட்டாள் ஆக்கிடுவீங்க...நம்புற மாதிரி மூஞ்சிங்களா இதெல்லாம் என கலாய்க்கிறார்.

 மீம்சில் கலாய்க்கும் ரசிகர்கள்

மீம்சில் கலாய்க்கும் ரசிகர்கள்

விஜய் கலாய்த்தது மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் மீம்சில் கலாய்த்து வருகிறார்கள். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நிறைய பேர், டாக்டர் பட ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ மாதிரி இருக்கே என கேட்டிருந்தனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக அகண்டா படத்தில் என்ஐஏ அதிகாரியிடம் பேசும் பாலகிருஷ்ணா, Both are not same என சொல்லி, கெட்டவர்களை கொன்றது ஏன் என்பதை விளக்குவார். இதை வைத்து, அகண்டா பாலகிருஷ்ணா போட்டோ பதிவிட்டு, டாக்டர் ஃபஸ்ட் சிங்கிள்...பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ both are not same என கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X