Biggboss Amir: பிக்பாஸ் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம்.. பாவனியை தொடர்ந்து அமீரும் சினிமாவில் என்ட்ரி!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜோடி அமீர் மற்றும் பாவனி. நடன இயக்குனரான அமீர், பிக்பாஸ் மற்றும் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியுடன் இணைந்து டைட்டிலையும் தட்டித் தூக்கினார்.

அமீர் இயக்குனராக களமிறங்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத சில வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக உள்ளதாக படத்தின் இயக்குனர் பிடி தினேஷ் தெரிவித்துள்ளார்.

Biggboss season 5 Amir tamil cinema 5

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடன இயக்குனர் அமீர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த அமீர், நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான சீரியல் நடிகை பாவனியிடம் தன்னுடைய காதலை தெரிவித்திருந்தார். இந்த ஜோடி மிகப்பெரிய ஹிட்டாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி களம் இறங்கி டைட்டிலை வின் செய்தது. தொடர்ந்து அமீர் படங்களை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிவந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அமீர் -பாவனி ஜோடி: இருவரும் காதலர்களாகவே அஜித்தின் துணிவு படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அமீர் கோலிவுட்டில் நாயகனாக களமிறங்கியுள்ளார், இயக்குநர் முத்தையாவின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் தினேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் அமீர் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஸ்டைஸ் ஃபிலிம் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அமீருடன் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி என பல நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஹீரோவாக களமிறங்கும் அமீர்: சில மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்வியலை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக உள்ளதாக படத்தின் இயக்குனர் தினேஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்கை இயக்குனர் சிறப்பாக திட்டமிட்டு வருகிறார். அமீர் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ள நிலையில் பாவனியும் நடிகர் விமலுடன் இணைந்து உருவாகியுள்ள வெப் தொடரில் நாயகியாக நடித்து முடித்துள்ளார். அமீர் மற்றும் பாவனி இருவரும் இந்த ஆண்டில் திருமணம் செய்ய உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த கமிட்மெண்ட்களால் அவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அமீர் -பாவனி பிரேக்கப்?: இதனிடையே அமீர் மற்றும் பாவனி இடையில் பிரேக்கப் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் இவர்கள் இருவரும் அதிகமாக போஸ்ட்களை வெளியிடாத நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி -பதில் பகுதியில் பேசிய பாவனி, அவர் சிங்கிளா என்ற கேள்விக்கு ம்ம்ம் என்று பதிலளித்திருந்தார். அமீருடன் கமிட்டாகியுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளது இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X