விஜய் சுனாமி.. தவெகவுக்கு ஒரு கோடி ஓட்டுக் கிடைக்குமா?.. பிரசாந்த் ரங்கசாமி சொல்லும் ஆருடம்..
சென்னை: சினிமா விமர்சகரும் நடிகருமான இட்டிஸ் பிரசாந்த் என அழைக்கப்படும் பிரசாந்த் ரங்கசாமி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்த தேர்தலில் ஒரு கோடிக்கும் மேலான ஓட்டுக்கள் கிடைக்கும் என ஆருடம் சொல்கிறார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை, அவினாசி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் ரோடு ஷோவை தொடர முடியாமலும், பிரச்சாரத்தை முழுமையாக பண்ண முடியாத அளவுக்கு மக்களின் வெள்ளத்தில் திக்குமுக்காடி போயுள்ளார் என்றே பிரசாந்த் பதிவிட்டுள்ளார்.

இதே நிலை இப்படியே நீடித்தால், தமிழ்நாட்டு தேர்தல் வரலாறு காணாத தேர்தலாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்களே விஜய்யின் சுனாமியை கணிக்க முடியாத அளவில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
விஜய் சுனாமி: மோடி அலை எப்படி இருந்ததோ அதை விட விஜய் சுனாமி தமிழ்நாடு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த முறை விஜய் எப்படியும் ஆட்சியை பிடித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் 20க்கும் மேற்பட்ட கட்சிகளை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பலமான கட்சி என காட்டி வருகிறது என்றும் ஆனால், விஜய்க்கு மக்கள் ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து செலுத்தி வரும் அன்பை பார்த்தால் இந்த தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக மாறும் என்று தான் தோன்றுகிறது என பலரும் கூறத் தொடங்கியுள்ளனர்.
விஜய்யை விமர்சித்த பிரசாந்த் ரங்கசாமி: விஜய்க்கு எதிராக கருத்துக்களை சொல்லி வந்த பிரசாந்த் ரங்கசாமி கோவை, திருப்பூரில் விஜய்க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து வாயடைத்துப் போயுள்ளார். ப்ளூ சட்டை மாறனும் திருப்பூரில் விஜய்க்கு கொடுத்த உற்சாக வரவேற்பை பார்த்து பாராட்டியுள்ளார். செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு வந்ததில் இருந்தே தவெக டாப் கியரில் செல்கிறது என்றும் மக்கள் விஜய்யை முதல்வராக மாற்றத் துடிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
ஒரு கோடி ஓட்டு: ஆரம்பத்தில் தவெகவை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் 2.5 கோடி ஓட்டுக் கிடைக்கும் என்று சொன்னபோது, நானே நக்கலாக சிரித்தேன். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க விஜய்க்கு கிடைத்து வரும் செல்வாக்கை பார்த்தால், எப்படியும் ஒரு கோடி ஓட்டுக்களாவது தவெகவுக்கு கிடைக்கும் என்றே கணிக்க முடிகிறது என பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ளார். அவரது கருத்தை ஆதரித்தும், கலாய்த்தும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











