சம்பவம்.. சதம் அடித்த 'சச்சின்' விஜய்.. ஷாக்கான அரசியல் தலைவர்கள்.. விசில் சுனாமி!
சென்னை: முதல் சுற்று வாக்குப் பதிவு தவெக தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்துப் போட்டியிட்ட தவெக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களே பின்னடைவை சந்தித்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஒரு சீட் ஜெயித்து எம்எல்ஏ ஆவதே கஷ்டம் தான் என கமல்ஹாசன் போல நினைத்து பேசிவிட்டனர். ஆனால், தளபதி விஜய்க்கு உள்ள மக்கள் சப்போர்ட்டையும் குறைத்து மதிப்பிட்டதன் விளைவு தான் இந்தளவுக்கு திமுக வீழ்ச்சியடைய காரணம் என்கின்றனர்.

தவெக முன்னிலையிலும், அதிமுக 2வது இடத்திலும், 200 சீட் வெல்வோம் என 20 பிளஸ் கட்சிகளை கூட்டணியில் வைத்த திமுக 3வது இடத்துக்கு சென்றிருப்பதால் தவெகவினர் சோஷியல் மீடியாவில் இது விஜய் அலை அல்ல சுனாமி என கொண்டாடி வருகின்றனர்.
சதம் அடித்த சச்சின்: சினிமாவில் 100 கோடி, 200 கோடி என சம்பளம் வாங்கி முன்னிலையில் உள்ள விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், பல சிக்கல்களை சந்தித்தார். விஜய்க்கு எதிராக கிளப்பட்ட பிரச்னைகள் எல்லாம் அவருக்கு சாதகமாக இந்த தேர்தலில் மாறியது தான் விஜய் முன்னிலை வகிக்க காரணம் என்கின்றனர். சதம் அடித்த சச்சின் என ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சுனாமி: இது விஜய் அலை அல்ல விஜய் சுனாமி என்றும் சம்பவம்ன்னா இப்படித்தான் இருக்கணும். அண்ணன் நா வரவா ரெடிதான் என விஜய் பாடியது எல்லாம் சும்மா இல்லை என்றும் "நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. கொஞ்சம் நவுந்தேன்னா இங்க 8 கோடி பேரு" என விசில் அடித்து வின் பண்ணிவிடுவாரோ என மற்ற கட்சியினர் எல்லாம் கலங்கிப் போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications