Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சைவத்திற்கு அசைவ சேவல்... தயாரிப்பாளராக மாறிய விஜய்...
சைவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தலைவா' படத்திற்கு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் 'சைவம்'. தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கி வரும் விஜய் இப்படத்தில் புதிய முயற்சியாக 'தெய்வத்திருமகள்' படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த பேபி சாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இயக்கி வருகிறார்.
இந்த குழந்தைதான் படத்தின் நாயகி. சைவம் படத்திற்கு வேறு நாயகன், நாயகி கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். 'சைவம்' என பெயரிடப்பட்டு அசைவமான சேவலை வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு விஜய்-யின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். இப்படத்தை விஜய் தின்க் பிக் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.