For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்

|
ASURAN FDFS PUBLIC REVIEW | DHANUSH | VETRIMARAN | FILMIBEAT TAMIL

சென்னை: தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் சேட்டிலைட் உரிமையை பலத்த போட்டிகளுக்கு இடையில் ஸ்டார் விஜய் டிவி தட்டிப்பறித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை விஜய் டிவி ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளது.

புதிய படங்களை யார் கைப்பற்றுவது என்பதுதான் இன்றைக்கு சேனல்களுக்கு இடையே பெரும் போட்டியாக உள்ளது. பண்டிகை கால விடுமுறை நாட்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று புரமோ போட்டு விளம்பர வருமானத்தை அள்ளித்தருவது இந்த படங்கள்தான். எனவேதான் புது படங்களை போட்டி போட்டு டிவி சேனல்கள் வாங்குகின்றன. தற்போது விஜய் படத்தை சன் டிவி முந்திக்கொண்டு வாங்கியது. அதே போல அசுரன் படத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

Vijay TV acquires satellite rights to ‘Asuran’ movie

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டனியில் உருவான 4ஆவது படைப்பு தான் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அசுரன் படமும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. நாவலாசிரியர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாய் கொண்டு உருவான படம் தான் அசுரன்.

அசுரன் கதைச் சுருக்கம், இயல்பு வாழ்க்கையை இழந்த ஒரு குடும்பம் இயல்பை தேடி ஒடுகிறது. அது என்ன இயல்பு ஏன் அந்த குடும்பத்தின் இயல்பு பறிபோனது. அதற்கான காரணங்கள் என்ன, அந்த குடும்பம் மீண்டும் அந்த இயல்பை மீட்டெடுத்ததா என்பதே அசுரன் படம்.

வெற்றிமாறன் இதற்கு முன் எடுத்த அத்தனை படங்களிலும் தனுஷ் பிரச்சனைகள் நிறைந்த இளைஞர் என்றும், எப்படி அவர் அதை எதிர்கொண்டார் என்றே இருக்கும். இம்முறை கதையே வேறு. படத்தில் கிட்டதட்ட 50வயது நடுநிலை குடும்பஸ்தனாக நடித்திருப்பார் தனுஷ்.

தன் குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளும் தனுஷ் மனம் தளராத நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சி வரும். அதில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் ஒரு தெரு முழுக்க மற்றவர் காலில் விழுந்து எழும் தனுஷ் நடிப்பின் உச்சத்திற்கு சென்றிருப்பார்.

இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் கூட, பட இசை வெளியீட்டின் போது தனுஷ் இந்த படத்திற்காக தேசிய விருது பெறுவார் என்று கூறியிருந்தார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டீவி பெற்றுள்ளது. இதனை விஜய் டீவி சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இனி ஸ்டார் விஜய் டிவியில் அசுரன் படத்தை பார்க்கலாம். தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களை

English summary
Star Vijay TV has snapped up the satellite rights of the recently released 'Asuran' directed by Vetrimaaran, starring Dhanush. Vijay TV has made the announcement on Twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more