Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை : நகைச்சுவை பாவனைகள், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் பேச்சு என சமீபகாலமாக விஜய் டிவியில் கலக்கி வருபவர் நடிகர் புகழ்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் உடன் இவர் அடிக்கும் காமெடி கூத்து யாரையும் காயப்படுத்தாமல் அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் இப்பொழுது புது கெட்டப்பில் அட்டகாசமான லுக்கில் விதவிதமான போட்டோசூட் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் புகழ்.
ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை!
தனி ரசிகர் பட்டாளமே
தமிழில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்காக இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
கலக்கப்போவது யாரு
பல நகைச்சுவை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் வித்தியாசமான தலைமுடியுடன், அனைவரையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை என தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கியவர்.
மாபெரும் வெற்றி
அதன்பின் சமையலை மையமாக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியான " குக் வித் கோமாளி" யில் போட்டியாளராக கலந்து கொண்டு ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சக போட்டியாளர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு இந்த நிகழ்ச்சியும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.
வித்தியாசமான கெட்டப்பில்
இவ்வாறு தொலைக்காட்சியில் நகைச்சுவை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய புகழ் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ள நிலையில் இவர் இப்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் அனைவரும் அசந்து போகும் வகையில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
Recommended Video
செம ஸ்டைலிஷாக
தனது அழகான கர்லிங் முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்துகொண்டு பிளாக் அண்ட் ப்ளாகில் செம ஸ்டைலிஷாக பலரும் அசந்து போகும் வகையில் பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக போஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்திருக்கும் புகழின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.