Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விஜய் டிவி விருது விழாவில் பலரையும் கலங்க வைத்த டிடியின் உருக்கமான பேச்சு.. வைரலாகும் வீடியோ!
சென்னை: விஜய் டிவி விருது விழாவில் தொகுப்பாளினி டிடி பேசிய உருக்கமான பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. தொகுப்பாளராக மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார்.
ஏராளமான பிரபலங்களை நண்பர்களாக கொண்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு.. தமிழகம் கண்டிராத சிரிப்பு.. சதீஷை பங்கம் செய்த பிரபல நடிகை!
ஹீரோயின்களுக்கு போட்டி
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு போட்டியாக பிகினி, மாடர்ன் உடை என கலக்கலாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தினார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.
விஜய் டிவி விருது விழா
அவ்வப்போது வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு குஷிப்படுத்தி வரும் டிடி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு பலரையும் கலங்க செய்துள்ளார். அதாவது விஜய் டிவியின் விருது விழா அண்மையில் நடைபெற்றது.
தப்பான பொருளை எடுத்தா
அதில் டிடி பேசிய உருக்கமான பேச்சின் க்ளீப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் டிடி பேசியிருப்பதாவது, கேர்ள்ஸோ பாய்ஸோ யாரோ, நீங்க தப்பான ஒரு பொருளை கையில எடுத்துட்டீங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சா யோசிக்காம அதை கீழ வச்சுடுங்க.
யோசிக்கக்கூட மாட்டான்
அய்யோ நம்ம கீழ வைக்கலன்னா அவன் ஏதாவது சொல்லிடுவான், இவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு அதை கையிலேயே வச்சுருக்காதீங்க. அது உங்கள் வாழ்க்கையை எடுத்துடும். அவன் பேசிருவானோ இவன் பேசிருவானோன்னு பயந்து கீழ் வைக்காம இருக்கீங்கல்ல, நீங்க வச்சதுக்கு அப்புறம் எவனும் அதைப்பத்தி யோசிக்கக்கூட மாட்டான்.
கண்கள் கலங்கி
ரெண்டு நாள்தான். தயவு செய்து தப்பான பொருள எடுத்திங்கன்னா தயவு செய்து வச்சுருங்க என உருக்கமாக பேசியுள்ளார் டிடி. டிடியின் இந்த பேச்சை கேட்டு அங்கு அமர்ந்திருக்கும் சீரியல் பிரபலங்கள் கண்கள் கலங்கி கைகளை தட்டி ஆமோதித்துள்ளனர்.
Recommended Video
விவாகரத்து
தொகுப்பாளினி டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இறுதியாக 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.