இயக்குனராகும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.. மலையாளத்தில் அசத்தலான ஆரம்பம்!

சென்னை : பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி நடிகையாக பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிலையில் இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

Recommended Video

Anchor DD ன் இயக்குனர் அவதாரம் | Mukkathe Penne | House of DD

மலையாளத்தில் வெளியான "என்னு நிண்டே மொய்தீன்" என்ற படத்தில் வரும் முக்காதே பெண்ணே பாடலின் மீளுருவாக்கமாக இந்த பாடல் உருவாகியுள்ளது.

இதுவரை நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் நாம் அனைவரும் பார்த்து வந்த டிடி இப்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த பாடலை சிவகார்த்திகேயன், ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

பிரபலமான நிகழ்ச்சிகளை

பிரபலமான நிகழ்ச்சிகளை

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று வரை முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கௌதம் மேனனின் இயக்கத்தில்

கௌதம் மேனனின் இயக்கத்தில்

ஒரு சில சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார் இவர் இப்பொழுது திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் ஏற்கனவே "உலவிரவு" என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

முக்காதே பெண்ணே

முக்காதே பெண்ணே

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "என்னு நிண்டே மொய்தீன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், இதில் வரும் "முக்காதே பெண்ணே" பாடலுக்காகவே இன்று வரை பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த அளவிற்கு இந்த பாடலின் இசை அனைவரையும் மெய் மறக்க வைத்திருக்கும்.

மீளுருவாக்கம் செய்து

மீளுருவாக்கம் செய்து

முக்காதே பெண்ணே பாடலுக்கு டிடியும் மிகப்பெரிய ரசிகையாக இருந்து வரும் நிலையில் இப்போது அந்த பாடலை மீளுருவாக்கம் செய்து நடித்து இயக்கியும் உள்ளார். அவ்வாறு மீளுருவாக்கப்பட்ட இந்த பாடலில் டிடி மணப்பெண் கோலத்தில் இருக்க பிரபல மலையாள நடிகர் கிருஷ் மணமகன் கோலத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

மிகப்பெரிய வரவேற்பு

மிகப்பெரிய வரவேற்பு

இதுவரை ரசிகர்கள் பலரும் டிடியை மிகச் சிறந்த தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் மட்டுமே பார்த்து வந்த நிலையில் இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் டிடிக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, டோவினோ தாமஸ், நஸ்ரியா உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X