தொகுப்பாளினி டிடி-க்கு முழங்காலில் பெரிய ஆப்ரேஷன்..சோதனையான காலம்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

சென்னை: விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான டிடி, பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரால் சிறிது நேரம் கூட நிற்க முடியாத நிலையில், தற்போது அவரது முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்களை டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன். மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனது நடக்கும் 4வது அறுவை சிகிச்சை ஆகும். எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இது மிகவும் வேதனையான விஷயம் தான், ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

dhivyadharshini dd anchor surgery

தொகுப்பாளினி டிடி: நான் என்னையும், என் முழங்காலையும் மிகவும் கடினமாக வறுத்திக்கொண்டேன். இந்த 2 மாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திரையில் என்னை நேசிப்பவர்களுக்காகவும், எப்போதும் என்னை ஆதரித்தவர்களுக்காகவும், என் வலியைப் புரிந்துகொண்டவர்களுக்காகவும் இந்தப் பதிவை இடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த நிபந்தனையற்ற அன்பைப் பெற நான் என்ன செய்தேன் என்று நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தவர்களுக்கும், வேலையில் எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும், என் ஆழ் மனதில் இருந்து மிகப் பெரிய நன்றியை சொல்ல விரும்புகிறேன்.

dhivyadharshini dd anchor surgery

மருத்துவர்களுக்கு நன்றி: அது என்னை என் இருண்ட நாட்களைக் கடந்து வர உந்துதலாக இருந்தது. இந்த வலி என்னை ஒரு கசப்பான நபராக மாற்றிவிடக்கூடாது என்று நான் எப்போதும் எனக்குள் சொல்லிக் இருந்தேன். அதைச் செய்ய உங்கள் அன்பு எனக்கு உதவியது. இப்போது,வெளிச்சம் வந்து இருப்பதால், மீண்டும் வலுவாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன் (நான் ஏற்கனவே இருக்கிறேன்). மிக முக்கியமாக, எனக்கு இந்த முழங்கால் அறுவை சிகிச்சை செய்து, என்னைத் தங்களுடையது போல் கவனித்துக்கொண்ட sims_hospitals மருத்துவர்கள்,நர்ஸ், இந்த இக்கட்டான நேரத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி.

dhivyadharshini dd anchor surgery

கடினமான 10 ஆண்டுகள்: இந்த கடினமான 10 ஆண்டுகளில் நான் நலம் பெற வேண்டும் என மனதார நினைத்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், தயவுசெய்து என்னிடம் வந்து சொல்லுங்கள், உங்களிடம் ஆசீர்வாதங்களை பெற விரும்புகிறேன். நான் வலுப்பெற்று, விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என டிடி அந்த பதிவில் பதிவிட்டுள்ளார். கால் முட்டியில் இதற்கு முன் டிடிக்கு மூன்று முறை அறுவை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது நடந்துள்ளது நான்காவது ஆப்ரேஷனாகும். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலம் பெற்று வரவேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X