காலில் தாங்க முடியாத வலி.. மீண்டு வந்த டிடி.. ரஜினியைப் பார்த்த பூரிப்பில் போட்ட ஆட்டத்தை பாருங்க!

சென்னை: நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,கடந்த மாதம் இவருக்கு முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்துள்ள டிடி, இணையத்தில் அட்டகாசமாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் டிடி. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்தும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடியை முன்பு போல் பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் அவரது கால் வலி தான் என்று கூறப்பட்டது.

dhivyadharshini dd video

காலில் தாங்கமுடியாத வலி: டிடிக்கு முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்ததால், அதற்காக ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், அந்த அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக தவறாகி விட்டது. அதை சரி செய்வதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில் அதுவும் பலன் அளிக்கவில்லை. இப்படி மூன்று முறை ஆப்ரேஷன் செய்து கொண்ட டிடி கால் வலியால் துடித்துவந்தார். இதையடுத்து, நான்காவது முறையாக மீண்டும் காலில் ஆப்ரேஷன் செய்து கொண்டார். அந்த போட்டோவை இணையத்தில் டிடி பகிர்ந்து இருந்தார்.

சோதனையான காலம்: அதில், கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன். மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனது நடக்கும் 4வது அறுவை சிகிச்சை ஆகும். எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இது மிகவும் வேதனையான விஷயம் தான், ஆனால் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.இந்த பதிவினைப் பார்த்த பலர் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர்.

மீண்டு வந்த டிடி: இந்நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும், தலைவர் தரிசனத்துக்கு ரெடி, ஆப்ரேஷனுக்கு என் முதல் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, நான் தலைவரின், வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி, அவரிடம் ஆசிர்வாதம் பெற்றேன் என பதிவிட்டுள்ளார். நல்லபடியாக குணமடைந்துள்ள டிடிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X