Divyadharshini: 10 வருஷமா தாங்கமுடியாத வலி.. 2 நிமிஷம் கூட என்னால நிக்க முடியல.. கண் கலங்கிய டிடி!

சென்னை: பத்து வருஷமா தாங்கமுடியாத கால் வலியுடன் தான் இருக்கிறேன், என்னால இரண்டு நிமிஷம் கூட நிற்க முடியாது என்று டிடி கண்கலங்கி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

vijay tv anchor dhivyadharshini emotional interview about health issues

முட்டியில் அறுவை சிகிச்சை: இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிடி, மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், முட்டியில் எனக்கு வலி இருந்ததால் ஒரு அறுவை சிகிச்சை செய்தேன், அது தவறாகி விட்டது. அந்த தவறை சரி செய்ய மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தேன். அதற்குள் எனக்கு Autoimmune Diseases அதிகரித்து விட்டது. Autoimmune எதற்கு வருது, யாருக்கு வரும் என்று எதுவுமே சொல்லவே முடியாது. ஆனால், அப்படி வந்துவிட்டால், அது அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.

வலியுடன் போராடினேன்: எல்லாத்திற்கும் மருந்து இருக்கு இதற்கு மருந்து இல்லையா, எனக்கு இந்த நோய் ஏன் வந்தது, என்ன செய்தால் சரியாகும் என பல ஆண்டுகள் வலியுடன் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல இதை சரி செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்தேன். நீண்ட நேரம் நிற்க முடியாததால், விஜய் டிவியில் கூட என்னால நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது.

நிற்கக்கூட முடியல: 2013ம் ஆண்டு எனக்கு காலில் வலி ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்தேன் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக வலியுடன் போராடி வருகிறேன். வலியே இல்லாமல் நான் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என்னால் 2 நிமிஷம் கூட நிற்க முடியாது, வீல் சேரில் தான் வெளியில் வருகிறேன். அதே போல, கையில் ஸ்டிக் இருந்தால் 2 நிமிஷமாவது என்னால நிற்கவே முடியும்.

கண்கலங்கினார்: இரண்டு காலில் நான் கட்டிய கோட்டை தகர்ந்து போய், இனி ஒன்றரை கால் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு, இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று யோசித்துத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். ஏன் என்றால் படப்பிடிப்பில் ஒரு ஷாட் எடுத்துவிட்டு பின் ஓய்வு எடுத்துக்கொள்வேன். கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்ததால், நான் முன்பை விட பல விஷயங்களில் தெளிவாக யோசித்து முடிவு செய்கிறேன் என்று திவ்யதர்ஷினி கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X