ஜிவ்வுன்னு இழுக்கிறாரே.. அன்பே அன்பே கொல்லாதே.. டிடியை கொஞ்சும் ரசிகர்கள்!
சென்னை : சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் தொகுப்பாளர்களின் மிகவும் முக்கியமானவர் டிடி என்று நாம்அனைவரும் அன்போடு அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
விடுமுறைக்கு அவர் மாலத்தீவுக்கு சென்றுள்ள இவர், அங்கு எடுக்கும் போட்டோக்கள் மற்றும் புகைப்படங்களை டிடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் இவர் வெளியிட்ட நீச்சல் வீடியோ மிகவும் வைரலானது.

முக்கியமான பங்கு
நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். இவர் விசில், பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விவாகரத்து
2014ம் டிடிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகும் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகை தொகுத்து வழங்கி வருகிறார்.

நீச்சல் குள வீடியோ
டிடி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார், அங்கு நீச்சல் குளத்தில் இருக்கும் போது எடுத்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. நீச்சல் வீடியோவை பதிவிட்டு, இது சூரிய அஸ்தமனத்தை பார்த்து நான் வலியை மறந்தேன் என்ற கேப்டனும் போட்டு இருந்தார்.

அன்பே அன்பே கொல்லாத
தற்போது இவர், கருப்பு வெள்ளை போட்டோஷூட்டில் ராதாவைப் போன்று உடைந்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர் ஒருவர் ஜூன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே கொல்லாத பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படமும்இணையத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications