Divyadarshini: கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடித்த டிடி.. மயங்கிப்போன ஃபேன்ஸ்!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ள சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் டிடி. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த டிடி, தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி: இவர், கமல் ஹாசனின் தயாரிப்பான நள தமயந்தி படத்தில் பிராமண பெண்ணாக நடித்தார், இது தமிழ் மக்களின் விரும்பிய படமாக மாறியது. இதையடுத்து அவர், விசில் திரைப்படத்தில் வேறு விதமாக நடித்து ரசிகர்ளை கவர்ந்தார். சில திரைப்படங்களில் சில சிறிய பாத்திரங்கள் மற்றும் ரூபா சுவாமிநாதனின் ஒரு சுயாதீன ஆங்கில திரைப்படத்தில் ஒரு பாத்திரத்திற்குப் பிறகு, மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார்.
கால் வலி: சின்னத்திரையில் பிஸியாக இருந்த டிடியை முன்பு போல் சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் அவரது கால் வலி தான் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிடி யூடியூப் சேனலுக்கு டிடி அளித்திருந்தார். அதில் , எனக்கு முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக நான் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், அந்த அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக தவறாகி விட்டதால் என்னால் நடக்க முடியவில்லை என்றார்.

கறுப்பு புடவையில்: டிடிக்கு கால் வலி இருப்பதால், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இருப்பினும் இன்ஸ்டாகிராம் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் டிடி தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குறித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











