பத்து வருஷமா வலி தான்.. வலி இல்லாத நாட்களே இல்லை.. டிடி கண்ணீர் பேட்டி!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ள டிடி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால், பத்து ஆண்டுக்கும் மேலாக வலியால் அவதிப்பட்டு வருவது குறித்து கண்ணீருடன் பேசி உள்ளார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் டிடி. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த டிடி, தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர், கமல் ஹாசனின் தயாரிப்பான நள தமயந்தி திரைப்படத்தில் பிராமண பெண்ணாக நடித்தார், இது தமிழ் மக்களின் விரும்பிய படமாக மாறியது. அதையடுத்து அவர், விசில் திரைப்படத்தில் வேறு விதமாக நடித்து ரசிகர்ளை கவர்ந்தார். சில திரைப்படங்களில் சில சிறிய பாத்திரங்கள் மற்றும் ரூபா சுவாமிநாதனின் ஒரு சுயாதீன ஆங்கில திரைப்படத்தில் ஒரு பாத்திரத்திற்குப் பிறகு, மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார்.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி: சின்னத்திரையில் பிஸியாக இருந்த டிடியை முன்பு போல் பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் அவரது கால் வலி தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டிடி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எனக்கு முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக நான் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், அந்த அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக தவறாகி விட்டது.அதை சரி செய்வதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன் ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை.
10 வருஷமா வலி தான்: எனக்கு இந்த பிரச்சினை 2013ல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 10 வருஷத்தில் வலி இல்லாத நாட்களே இல்லை. இந்த பத்து ஆண்டில் வலியில்லாமல் நான் தூங்கிய நாட்கள் பத்து என்று சொன்னால் அது மிகையாகாது. தினமும் வலி மட்டும் தான் இருந்தது. இதை சாப்பிட்டா வலி போகுமா, என்ன செய்தா வலி போகும் என்று வலியோடுதான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன். இருந்தாலும், எனக்கு டிராவல் பண்ணுவது பிடிக்கும் என்பதால், வீல் சேரில் பல நாடுகளுக்கு செல்கிறேன். ஆனால்,சென்னையில் நான் டிராவல் செய்யாததற்கு காரணம் சென்னை சாலையில் வீல்சேரில் செல்லமுடியாதது தான். அதை நினைக்கும் போதுதான் மனசு இன்னும் கஷ்டமாக இருக்கிறது என்று டிடி கண்ணீருடன் அந்த பேட்டியில் பேசினார்.
ஜோஸ்வா இமைபோல் காக்க: டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதையடுத்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தற்போது டிடி கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











