நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் கிடையாது.. மணிமேகலை -பிரியங்கா விவகாரத்தில் மாகாபா சொன்ன விஷயம்

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆங்கர் மணிமேகலை தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அவர் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா அதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் மணிமேகலை அறிக்கை மற்றும் வீடியோ மூலம் தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளார். பணம், புகழ் எல்லாமே அவசிய தேவைதான் என்றும் ஆனால் அவற்றையெல்லாம் விட சுயமரியாதை மிகவும் முக்கியம் என்றும் மணிமேகலை கூறியுள்ளார். இந்நிலையில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையில் குக் வித் கோமாளி செட்டில் நடந்த வாக்குவாதங்கள் தற்போது ஆடியோவாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது,

television cwc show ma ka pa anand

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் ஆங்கர் மணிமேகலை. இந்த விஷயம் தான் தற்போது மீடியாவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய விலகலுக்கு காரணம் அந்த ஷோவில் குக்காக செயல்பட்டு வரும் மற்றொரு ஆங்கர்தான் என்று நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார் மணிமேகலை. அவர் பிரியங்கா குறித்த தன்னுடைய குற்றச்சாட்டை அடுத்தடுத்து கூறிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்பதையும் அவர் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து மணிமேகலைக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது,

மாகாபா ஆனந்த் கருத்து: இந்த விஷயத்தில் யார் பக்கம் நியாயம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் சண்டை போட்டுக் கொண்ட ஆடியோ வெளியாகி உண்மையை ஓரளவுக்கு ரசிகர்களுக்கு பரிட்சயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் அகாடமியின் துவக்க விழாவில் பேசிய மாகாபா ஆனந்த், மணிமேகலை மற்றும் பிரியங்கா பங்கேற்று வரும் அந்த ஷோவில் தான் இல்லை என்பதால் நேரடியாக பார்க்காமல் தான் கருத்தை கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

television cwc show ma ka pa anand

வேடிக்கை பார்ப்பதே நல்லது: அவங்க ரெண்டு பேரும் அடித்துக் கொள்வதை சுட்டிக் காட்டியுள்ள மாகாபா, நாம் ஒரு காட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்த்து நாம் ஒதுங்கி சென்று விட வேண்டும் என்றும் அவற்றை சமாதானப்படுத்த முயன்றால் நம்மை நசுக்கி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தை நாம் வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது என்றும் மாகாபா கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விஷயம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான விஷயம் எல்லாம் கிடையாது என்றும் அவர் முகத்தில் அடித்தாற்போல பேசியுள்ளார்.

television cwc show ma ka pa anand

பாடகி சுசித்ரா ஆதரவு: விஜய் டிவியில் எப்போதுமே தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மிகுந்த உற்சாகத்துடன் காமெடியையும் கலந்து பேசி வரும் மாகாபா, இந்த விஷயத்தில் தான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மணிமேகலை -பிரியங்கா விவகாரத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். நேற்றைய தினம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த பாடகி சுசித்ரா, தன்னுடைய சப்போர்ட் எப்போதுமே மணிமேகலைக்குத்தான் என்று தெளிவுப்படுத்தியுள்ளார். பிரியங்கா குறித்து அவரது முன்னாள் கணவரிடம் கேட்டால் அனைத்து விஷயங்களும் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X