குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறோம்.. குட் நியூஸ் சொன்ன மணிமேலை!

சென்னை : குக் வித் கோமாளி மணிமேகலை சொந்த ஊரில், குட்டி சாம்ராஜ்ஜியத்தை தொடங்கி இருக்கிறோம் என பாலகால் பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளினி மணிமேகலை தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த போது இவரிடம் பாட்டு கேட்பதற்காக போன் செய்பவர்களை விட இவரிடம் பேசுவதற்கே பல ரசிகர்கள் போன் செய்வார்கள்.

தொகுப்பாளினி மணிமேகலை

தொகுப்பாளினி மணிமேகலை

தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார் மணிமேகலை. சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக உயர்த்தி உள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியிலிருந்து விலகினார்

நிகழ்ச்சியிலிருந்து விலகினார்

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன் முடிந்தநிலையில், மூன்றாவது சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்ட,மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் சண்டை என பல வதந்திகள் பரவின.

பண்ணை வீடு பாலக்கால் பூஜை

பண்ணை வீடு பாலக்கால் பூஜை

இந்நிலையில், மணிமேகலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அதில், HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X