சிவகார்த்திகேயன் நாயகியுடன் இணைந்து நடிக்கும் தொகுப்பாளர் ரக்ஷன்.. கூட யார் நடிச்சிருக்காங்க தெரியுமா!

சென்னை : நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான், டாக்டர் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அடுத்தடுத்து விஜய், ரஜினியுடன் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்களில் இவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக டாக்டர் படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அசத்தல் பிரியங்கா மோகன்

அசத்தல் பிரியங்கா மோகன்


டான் படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்து சிவகார்த்திகேயனுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்தில் பள்ளி மாணவியாகவும் நடித்து அசத்தினார். இந்த இரு கெட்டப்புமே இவருக்கு சிறப்பாக பொருந்தியது. இந்தப் படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து அந்தப் படமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசானது.

விஜய், ரஜினியுடன் கமிட்மெண்ட்?

விஜய், ரஜினியுடன் கமிட்மெண்ட்?

அடுத்தடுத்து ரஜினியின் தலைவர் 169 படத்திலும் விஜய்யுடன் தளபதி 67 படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படங்களை நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளனர். இந்தப் படங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா மோகனுன் இணைந்த ரக்ஷன்

பிரியங்கா மோகனுன் இணைந்த ரக்ஷன்

இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன், பிரியங்கா மோகனுடன் இணைந்து நடித்துள்ளார். இது விளம்பரப் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து நடித்துள்ளார்.

துல்கர் சல்மான் பிறந்தநாள்

துல்கர் சல்மான் பிறந்தநாள்

இந்நிலையில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரக்ஷன், அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த சூட்டிங்கின்போது துல்கர் சல்மானின் பிறந்தநாளையும் கேக் வெட்டி அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

வீடியோ வெளியீடு

இதன் வீடியோ வெளியாகி மிகுந்த இணையத்தில் வரவேற்பை பெற்றது. வீடியோவில் கேக் வெட்டும் துல்கர் சல்மான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை மற்றவர்களுக்கு பகிர்கிறார். இந்த வீடியோவை அடுத்து பிரியங்கா மோகன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தார். பிரியங்கா மோகன் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X