தீ-க்கும் தென்றலுக்குமான மோதல்.. விரைவில் விஜய் டிவியின் அடுத்த தொடர் விக்ரம் -வேதா!
சென்னை : விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை அந்த சேனலின் தொடர்களும் பெற்று வருகின்றன.
தொடர்களுக்கு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பை அடுத்து, அடுத்தடுத்த புதிய தொடர்களை விஜய் டிவி களமிறக்கி வருகிறது.
பிரபலமான படங்கள், பாடல்களின் முதல் வரிகளை கொண்டு அடுத்தடுத்த தொடர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவியின் பிக்பாஸ்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. அந்த வரிசையில் முதலில் இருப்பது பிக்பாஸ். சமீபத்தில்தான் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த தொடர் அதிகமான வரவேற்பை பெற்றது போலவே, சர்ச்சைகளையும் பெற்றது. அசீம், விக்ரமன், ஷிவானி என இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 சிறப்பான வகையில் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நடைபெற்று அதில் அமீர் -பாவ்னி ஜோடி டைட்டிலை வெற்றி கொண்ட நிலையில், அடுத்ததாக தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் 4வது சீசன் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தற்போது ப்ரமோ வெளியாகியுள்ளது.

முக்கியமான தொடர்கள்
விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது போலவே, தொடர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ரசிகர்களின் மனதை வெற்றிக் கொண்டுள்ளது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீசன் 2 என அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளன. ஒரு தொடருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைவதாக தெரிந்தால் உடனடியாக அந்தத் தொடர் நிறைவு செய்யப்பட்டு அடுத்தத் தொடர் களமிறக்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர்
அப்படித்தான் பாரதி கண்ணம்மா தொடருக்கு ஆரம்பத்தில் இருந்த மவுசு ரசிகர்களிடையே குறைய, அந்தத் தொடர் இனிதே நிறைவு பெற்றது. ஆனால் உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டு தற்போது அந்த தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்தத் தொடரில் அருணுக்கு பதிலாக சிபு சூர்யன் இணைந்துள்ளார். கதைக்களம் வேறாக இருந்தாலும் கேரக்டர்களின் பெயர்களில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

புதிய தொடர் விக்ரம் வேதா
இந்நிலையில் தற்போது சேனலின் புதிய தொடர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த விக்ரம் வேதா படத்தின் தலைப்பில் இந்த புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம். தொடரில் வேதாவாக பெண் கேரக்டர் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரின் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த தொடர் குறித்த ஒரு அறிவிப்பும் செய்யப்பட்டது.

விக்ரம் வேதா புதிய ப்ரமோ
சொகுசு காரில் வந்திறங்கும் விக்ரம் ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறார். இதையடுத்து அவரை கலாய்க்கிறார் நாயகி வேதா. தொடர்ந்து அவரை ப்ராங்க் செய்ததாகவும் கூறுகிறார். இதையடுத்து அந்த திருமணம் தொடர்ந்து நடைபெற்றதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ப்ரமோவை வெளியிட்டுள்ள விஜய் டிவி, தீ-க்கும் தென்றலுக்குமான மோதலே இந்த விக்ரம் வேதா என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











