twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஓப்பனிங் எப்போ தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரிலீஸ்!

    |

    சென்னை: ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்குகிறது என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடர்பாக சர்ப்ரைஸான அறிவிப்பை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அடுத்த புரமோவுடன் ரசிகர்களை சந்தித்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

    இந்த முறை சிக்னல்

    இந்த முறை சிக்னல்

    முன்னதாக, எந்தவொரு அறிவிப்பும் இல்லமால் கமல் ஹாசனின் பிக் பாஸ் புரமோ அதிரடியாக வந்த நிலையில், இன்று மாலை விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அடுத்த அப்டேட் வெளியாகும் என்ற ட்வீட் வெளியிடப்பட்டது. அப்பாடா ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் அப்டேட் ஒரு வழியாக வருகிறது என ரசிகர்கள் சந்தோஷத்தில் குதித்தனர்.

    எப்போது தொடங்குகிறது

    எப்போது தொடங்குகிறது

    இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சி உடன் தொடங்க உள்ள அறிவிப்பை கமல் பேசும் புதிய புரமோ வீடியோ உடன் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல அதனை பிக் பாஸ் குழு சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது.

    புரியாத புதிர்

    புரியாத புதிர்

    கடந்த இரண்டு புரமோ வீடியோக்களிலும் கொரோனா பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை அரசியல் பற்றி பேசுகிறாரா? யாரை குறிப்பிடுகிறார் என்பது தெரியாமல் கமல் பேசும் வசனங்கள் புரியாத புதிராக உள்ளது. திங்கள் முதல் ஞாயிறு வரை விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முறுக்கு மீசைக்காரன்

    முறுக்கு மீசைக்காரன்

    முறுக்கு மீசைக்காரன் மனசுக்குள்ள குழந்தையா கூட இருக்கலாம், அடங்கி போயிடுவான்னு நினைச்சவரு அதிகாரத்தை கூட கையில் எடுத்துக்கலாம், அதிமேதாவியா இருந்தவரு அடி முட்டாளா கூட இருக்கலாம். உள்ள போனா தெரிஞ்சுடும். என கமல் பேசும் புதிய புரமோ ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட விவாதங்களையும் கிளப்பி வருகின்றன.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையில் பாஸாகி இறுதி செய்யப்பட்டுள்ளது இந்த புரமோ மூலம் உறுதியாகி உள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ரசிகர்கள் குஷி

    ரசிகர்கள் குஷி

    ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்க உள்ள செய்தி பிக் பாஸ் ரசிகர்களை சந்தோஷத்தில் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. வெயிட்டிங்கிலேயே வெறியேறுது என்றும், அப்படியே போட்டியாளர்கள் பெயர்களை வெளியிட்டால் நல்லா இருக்கும் என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

    English summary
    Vijay Tv announced the Bigg Boss Tamil season 4 starts date with a new promo. Kamal Haasan talks about the show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X